படைப்புகள்

கதைகள், கவிதைகள், தொடர்கள் உள்ளிட்ட நேரடி தமிழ் படைப்பாக்கங்கள்

அலருக்கு அஞ்சி

1. கணேசமூர்த்திக்கு என்னானது என்று தெரியவில்லை. அவனைப் பார்த்து இருபது நாட்களுக்கும் மேலாகிவிட்டது. நாட்பட்ட குளிருக்கு ஆளான நிராதரவான மனிதனைப்போல் அவன் ஆகிக் கொண்டிருக்கிறான் என்பது எனக்குத் தெரியும். தெரிந்தும் அதைப்பற்றி ஒன்றும் அவனிடம்...

சுருக்குக்கம்பி

மடித்துக் கட்டிய அழுக்கு வேட்டியுடன் கொளுத்தும் வெயிலில் சோர்ந்து நடந்தான் சுடலை. தோளில் ஒரு சிவப்புத்துண்டு. கையில் ஒரு நீண்ட கம்பு. அதன் முனையில் ஒரு சுருக்குக்கம்பி. பத்தடி தூரத்தில் வியர்வை வடிய...

அழைப்பு மணி

வீட்டில் அடிக்கடி அழைப்பு மணி ஒலித்தது, கதவைத்திறந்து போய்ப்பார்த்தால் யாருமே இருப்பதில்லை. இது எப்போதும் தொடர்ச்சியாக நிகழ்ந்துகொண்டேயிருந்தது. யாரெனக் கண்டுபிடிக்கவே இயலவில்லை. என் வீட்டில் மட்டுமல்ல எதிர் வீட்டு மணியும் கூட. இரண்டு...

இராவணத் தீவு – பயணத் தொடர் 3

  பின்னவலை : யானைகள் சரணாலயம்   " Man only likes to count his troubles , but he does not count his joys "  -fyodor Dostoevsky நான் என் இன்பங்களை எண்ணுவதற்கு...

மலரினும் மெல்லிது

”சார், கிப்ட் பொண்ணுக்கா? மாப்பிள்ளைக்கா?”  என்று கேட்டாள் அந்த மஞ்சள் நிற சுடிதார் அணிந்த பெண்.  காலை ஒன்பது மணிக்கு கடை திறந்தவுடன் உள்ளே நுழைந்தவன், இன்னும் எதையும் தேர்வு செய்யவில்லையென்கிற புகார்,...

மெட்ராஸின் சிவப்பு நிற பேரழகு கட்டிடங்கள்- 4

செத்த காலேஜும் உயிர் காலேஜும் கி.மு 280 ஆண்டுகளிலேயே அலெக்சாண்ட்ரியாவில் தாலமி மியூசியத்தை உருவாக்கினான். என்று வரலாறு சொல்கிறது. ஒட்டு மொத்த ஆசியாவிலும் அருங்காட்சியகங்கள் அமைத்த பெருமை வெள்ளையர்களையே சாரும், இன்று உலகத்திலேயே அதிக...

வானத்தை வரைந்த சிறகு

      அன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் தாமதமாக எழுந்த வெங்கடேசன், புதிதாகப் பிறந்த குழந்தையைப் போல… காம்பவுண்டுக்கு வெளியே மஞ்சள் நிறத்தில் மடல் விரித்திருந்த வாழைக் குருத்தை வாஞ்சையோடு பார்த்துக் கொண்டிருந்தார். திடீரென...

இடிந்த வானம்

“வானம் ஒரு நீலக்குடை. நம் கூடவே வரும். ஆனால் மாறும். என்ன, அதன் பிடி தான் நம்மிடம் இல்லை. நாம் எந்த பக்கமும் நகர்ந்து பாக்கலாம். அப்படி நகர்ந்து அண்ணாந்து மேலே பார்த்தால்...

பேதமுற்ற போதினிலே -9

யாதும் ஊரே தொலைக்காட்சியை நான் வெறுக்கிறேன். பேர்பாதி காரணம் நிகழ்ச்சிகள் என்றால் இன்னொரு பாதி விளம்பரங்கள். தொலைக்காட்சியை முட்டாள் பெட்டி என்று சொல்வது தவறு. முட்டாள்களுக்கான பெட்டி என்றுதான் சொல்லவேண்டும். ஒரே விளம்பரத்தைத் திரும்பத்...

பெரு விஷ்ணுகுமார் கவிதைகள்

சுவிட்சுகளை மனனம் செய்தல் பறவையினங்களில் இந்த மின்விசிறிதான் அமானுஷ்ய குணம்கொண்டதுபோலும்  இரக்கம் கொண்டு ஒருநாள் அதைக் கூண்டிலிருந்து விடுவித்து  வானத்தில் மாட்டி வைத்தேன் இப்போது இந்நகரத்திற்கேயான மின்விசிறியென   கழுகொன்று சுழன்றுகொண்டிருக்கிறது  மேலும் விசிறியை இணைக்கும் மின்-வயர்களை  அது பாம்புகளென நினைத்துக்கொள்ள  இந்த அபத்தத்தை நிறுத்தவேண்டி அறையில் ஒவ்வொரு சுவிட்சாக  அமர்த்தி அமர்த்தி...