படைப்புகள்

கதைகள், கவிதைகள், தொடர்கள் உள்ளிட்ட நேரடி தமிழ் படைப்பாக்கங்கள்

மறக்க முடியாத மனிதர்

 தி. ஜானகிராமன் ‘கல்கி’யில் ‘அன்பே ஆரமுதே’ என்ற தொடரை எழுதிக் கொண்டிருந்த போதுதான் அவரது பெயர் அறிமுகமானது. அப்போது அத்தொடரை நான் வாரா வாரம் வாசிக்கவில்லை. அவை என் பள்ளி நாள்கள். அகிலன்,...

பிஜாய்ஸ் பிராந்தி

நகுலனின் சுருதி கவிதைத் தொகுதியைத்தான் முதன்முதலில் வாசிக்கத் தொடங்கினேன். சுருதி முகப்பு அட்டையில் உள்ள முகத்தின்மீது அமரத் துடிக்கும் அல்லது விடுபட விரும்பும் ஒரு கண்ணாடியின் தத்தளிப்புதான் எனக்குப் பிடித்தமானதாக இருந்தது....

சமரசம் மலர்ஸ்

என்னதான் இருந்தாலும் கொடியாள் ஆளொரு விண்ணிதான் என தன்னையறியாமல் உரத்துக் கூறிவிட்டதை உணர்ந்து, தான் கூறியதை  யாராவது கவனித்திருப்பார்களா எனத் திரும்பிப் பார்த்தார் உலகளந்தபிள்ளை.  குரல் கொட்டாவியோடு  கலந்திருந்ததாலோ என்னவோ ஒருவருக்கும் விளங்கியிருக்கவில்லை. மெல்லிய...

நிலவறைக் குறிப்புகள் ஒரு பார்வை -தேனம்மை லெக்ஷ்மணன்

ஃபியோதர் தஸ்தயெவ்ஸ்கியின் எல்லாப் படைப்புகளும் துயருறும் மனித ஆன்மாவினைப் பற்றியே பேசுகின்றன. இப்பூவுலகில் வாழ அதன் மனிதர்களோடு ஒத்திசைவோடு நடக்க அவரின் கதாபாத்திரங்கள் பெரும் பிரயத்தனம் செய்கிறார்கள். இயல்வாழ்விலும் மனதுக்குள் எப்போதும் ஒரு...

வரலாற்றை குறுக்குமறுக்குமாய் வாசித்துப் பார்த்தல்

1. ஸென் மனோநிலை என்பது அனைத்தும் அமைதியாக இருக்கும்போது தியானத்துக்குச் செல்வது அல்ல என்று சொல்வார்கள். இரைச்சல் நிறைந்த சந்தைக்குள் போகும்போது மனதுக்குள் தியானத்திற்கான அமைதியைக் கொண்டுவருதலே முக்கியமானதென வலியுறுத்துவார்கள். அவ்வாறுதான் வெளியுலகம் தேவையற்ற...

ஸீடீஎன்/√(5 ஆர் X க)= ரபெ – சிறுகதை

“நமஸ்காரம், டாக்டர் கோஸ்வாமி!” “நமஸ்காரம். டாக்டர் என்று சொல்லத் தேவையில்லை. வெறுமே கோஸ்வாமி என்று சொன்னாப்போதும்”. “ஏன் அயல் நாட்டுப் பல்கலைக்கழகம் ஒன்று உங்கள் தகுதியை ஆராய்ந்து கொடுத்திருக்கிறபட்டமாச்சே அது!” “என்ன பிரயோசனம்? என் திட்டம் இப்படிச்...

கு.அ.தமிழ்மொழி கவிதைகள்

  1) மிதிபடும் காலம் I. என் அளவுக் காலணிகள் எளிதில் கிடைத்துவிடுவதில்லை என்றுதான் இவ்வளவு நாட்களாக நம்பியிருந்தேன் நேற்று சுய்ப்ரேன் சாலையில் சென்றுகொண்டிருந்தபோது அதைத் தற்செயலாகப் பார்த்தேன் அத்தனைப் பொருத்தமாக என் கால்களை அணைத்தது ஓ! என் அன்புக் காலணியே! நீ...

பத்மபாரதி கவிதைகள்

வழித்துணை அனாந்தர ஊஞ்சலிலிருந்து தவறி விழுந்து ஓவென்று அழுகிற அவள் சின்னஞ்சிறுமி எம்பிக்குதித்து அவள் கன்னத்தை வருடும் செல்ல நாய்க்குட்டியின் வால்சுழட்டலில் வலி கரைந்தே போகிறது சதா கோபிக்கும் அப்பா தவறவிட்ட பொற்கணங்கள் முப்பது முக்கோடி அப்படி ரகசியங்களால் வளரும் சிறுமியின் பின்னலிடையில் அம்மா சொருகிய வேப்பங்கொழுந்து பச்சை மாறாது...

முத்துராசா குமார் கவிதைகள்

எச்சித்தட்டு புதையலாகத் தென்பட்டது தட்டில் பொறித்தப் பெயர். வழித்தாலும் உட்கொள்ள முடியவில்லை. இரவில் எப்படியும் அபகரித்துவிட புதையலுக்கு மேலே வனம் செய்து நீர் தேக்கினேன். வனம் அழித்து வறட்சியாக்கியும் புதையலைப் பெயர்க்க முடியவில்லை. மூன்று வேளைத் தோல்விகள் தாளாது பெயருடைய ஆளையே விழுங்க எழுந்தேன். சுவரில் தொங்கும் கண்ணாடிச் சட்டகத்துக்குள் சேரில் அமர்ந்திருந்தார்...

வெதும்பல்

அன்று சுபத்ராவுக்கு சமையல் கட்டில் வேலை நிறைய இருந்தது. அம்மாவின் கைமணம் போல் இல்லையென்றாலும் ஓரளவு நன்றாகவே சமைப்பாள். கற்றும் கொண்டாள். ஒருவேளை அப்பா பரமேசன் பேசும் பேச்சுக்களிலிருந்து வந்ததாகக் கூட இருக்கலாம்....