படைப்புகள்

கதைகள், கவிதைகள், தொடர்கள் உள்ளிட்ட நேரடி தமிழ் படைப்பாக்கங்கள்

கண்ணீரின் உவர்ப்பை ருசித்தல்-கனலியின் 25 ஆவது இணைய இதழிற்கு ஒரு முன்னுரை – க.விக்னேஸ்வரன்

கனலி கலை-இலக்கியச் சூழலியல் இணையதளம் தனது நான்காவது ஆண்டின் முதல்நாளில் அடியெடுத்து வைக்கிறது. தற்போது நீங்கள் எப்படி உணர்கிறீர்கள்? என்று என்னிடம் நானே (யாரும் நிச்சயம் கேட்க மாட்டார்களென்று தெரியும்) கேட்டுக்கொண்டால் எனது...

மூட்டைப்பூச்சிகள்

    இன்று இரவுதான் முதன் முதலாக அந்த கட்டிலிலிருந்த மூட்டைப்பூச்சிகள் அவரை கடிக்கத் தொடங்கின. எத்தனை அசதியில் தூங்கினாலும் அவருக்கு முழுமையான தூக்கம் கிடைப்பதில்லை.       இரண்டாம் லயன் பதினெட்டாவது வீடு (எண் கொஞ்சம்...

குடிகாரக் கடிகாரம்

கோலப்பனுக்கு ஒரு வினோதமான மனோ வியாதி இருந்தது. அது வியாதியா அல்லது வினோதமா என்பது கோலப்பனுக்கே தெரியாது. அப்படியே தெரிந்தாலும் கூட அதை ஏற்று கொள்ளும் மனப்பக்குவம் கோலப்பனுக்கு இல்லாமல் போனதுதான் வினோதம்....

யதார்த்தம் என்பது நிலையில்லாதது

எண்பதுகளின் இறுதியிலும் தொண்ணூறுகளின் தொடக்கத்திலும் பேசப்பட்ட முக்கியமான விஷயம் யதார்த்தவாதம் முடிவுக்கு வந்துவிட்டது. யதார்த்தவாதத்திற்கு இலக்கியத்தில் இனி இடமில்லை எனப் பலவிதமான உரையாடல்கள் நிகழ்ந்தன. அதன் பிறகு யதார்த்த கதைகளே எழுதப்படவில்லையா அல்லது...

யாத்வஷேம் – ஏழுகடல் உப்பும், பிணவறைப் புகையில் சில மின்மினிகளும்

யாத்வஷேம் (எதிர்வெளியீடு, பொள்ளாச்சி). கன்னடத்திலும் நேமிசந்த்ராவுக்கு மாநில அகாதமிபரிசு. தமிழ்மொழிபெயர்ப்பிலும் கே.நல்லதம்பிக்கு தேசிய அகாதமி பரிசு.  இதற்குமுன் குருதிப்புனல்நாவலுக்கு தமிழிலும், வங்காள மொழிபெயர்ப்பிலும் கிடைத்தது.  இப்படி வேறுநாவல்கள் உள்ளனவா தெரியவில்லை. யாத்வஷேம் என்றால்  ஹீப்ரு...

துப்பறியும் கதை-ச.வின்சென்ட்

துப்பறியும் கதை ஓர் இலக்கிய வகை. அது குற்றக் கதையின் (crime fiction) ஒரு பிரிவு. ஒரு குற்றம் அறிமுகப்படுத்தப்படும். அது விசாரிக்கப்படும். குற்றவாளி கண்டுபிடிக்கப்படுவார். துப்புதுலக்குவது ஒரு தனித் துப்பறிவாளராக இருப்பார்....

விமர்சகர் க.நா.சுப்ரமண்யம் எதிர்கொண்ட விமர்சனங்கள்

சிறுகதை, நாவல், கவிதை, மொழிபெயர்ப்பு, இதழ் பணி எனப் பல்வேறு இலக்கியச் செயல்பாடுகளுடன் தொடர்புடையவர் க.நா.சுப்ரமண்யம். ஆனாலும் இவர் விமர்சகர் என்ற நிலையிலேயே அதிகமும் கவனிக்கப்பட்டிருக்கிறார். தமிழில் புதிய விமர்சன மரபைக் கட்டமைக்கத்...

பல்லக்கும் சமூக அநீதியும் …

இந்தக் கட்டுரையை எந்த உச்ச வரம்பில் இருந்து தொடங்குவது என்ற குழப்பத்தில் இருந்தேன். மாட்சிமை மிக்க இந்தியச் சமூகம், எப்போதும் இருந்ததில்லை என்பதற்கான வரலாறுகளால் பறைசாற்றும் போது கண்டுணர முடியும். சமூகத்தில் அடுக்கு அமைப்பான வாழ்வியல் முறைகளைக் கொண்டு விளங்குவதோடு உரிமைகள் எனும் பெயரில் ஒரு சமூகம் பிரிதோரான சமூக மக்களை அநீதிக்கு ஆட்படுத்திக் கொண்டுதான் இருக்கின்றனர். இதில் ஒரு சம்பவமான பல்லக்கில் பவனி வரும் உரிமையை மட்டுமே மையப் பொருளாகவிவரிக்கிறேன். தற்போது பல்லக்கு தூக்குதல் நின்றுவிட்டாலும், ஒரு சில இடங்களில் பல்லக்குகளும் பல்லக்கு தூக்கிகளும் இருக்கின்றனர். சபரிமலைசெல்லும் ஐயப்பன் பக்தர்கள் இமயமலைப் பகுதிக்குச் செல்லும் பக்தர்கள் இன்னும் இது போன்ற மலை ஏற்ற பகுதிகளில் இருக்கும் கோவில்களுக்கு நடக்க முடியாதவர்கள் வயதான முதியவர்கள் போன்றோர்களைத் தூக்கிச் செல்லும் மனிதர்கள் இருக்கின்றார்கள். பல்லக்கும் இருக்கின்றன. இவர்களை தற்போது டோரி என்றழைக்கின்றனர். இவர்கள் அண்ணகர்கள் என் வேள்பாரியில் சு.வெங்கடேஷன் குறிப்பிடுகிறார். மேலும் விதை எடுக்கப்பட்டவர்கள் என்கிறார். பல்லக்கு ஏறுபவர் குறைந்தபட்ச வசதி வாய்ப்புகளைப் பெற்றவர்களால் மட்டுமே முடிகின்றது. ஆனால் இதே நிலை என்பது அன்று சமூக...

பாவனையற்ற அன்பின் மொழி

வண்ணநிலவன், எனக்கு அவருடைய சிறுகதைகள் வழியாகவே அறிமுகம். அழியாச்சுடர்கள் தளத்தில் வாசித்த அவருடைய ‘பலாப்பழம்’ சிறுகதையே நான் வாசித்த அவரின் முதல் கதை. தமிழின் ஆகச்சிறந்த சிறுகதைகள் என்று பட்டியலிட்டால் அதில் நிச்சயம்...

மாயி -சான் | ஹிரோஷிமாவின் வானம்பாடி

குண்டுவெடித்த சத்தத்தைக் கேட்ட மாயி-சான், உடனடியாக மயக்கமாகி விழுந்தாள். அவளுக்கு நினைவு திரும்பிய போது, நாலா பக்கமும் ஒரே புகைமூட்டம். வானத்தை முட்டித்துளைக்கும் உயரத்திற்கு, ராட்சதக் காளானாக கதிர்வீச்சுப் புகைமண்டலம் சூழ்ந்தது. கரும்புகை...