படைப்புகள்

கதைகள், கவிதைகள், தொடர்கள் உள்ளிட்ட நேரடி தமிழ் படைப்பாக்கங்கள்

யூர் வனமும் எண்களும்

பூமி தோன்றியபோதே எண்களின் அவசியமும் தோன்றிவிட்டது. மனிதர்கள் எண்களைக் கண்டுபிடிப்பதற்கு முன்பு அவைகள் என்னவென்றே தெரிவதற்கு முன்பு காடுகளிலும் பள்ள மேடுகளிலும் கடல்களிலும் உருண்டும் தலைகீழாகவும் ஒன்றோடு ஒன்று பின்னியும் நீந்தியும்  பல்வேறு...

டிவி ஆபீஸு

நினைவுகளைச் சுமப்பதைப் போல் பெருந்துயரம் எதுவுமில்லை. திருப்பத்தூரிலிருந்து சென்னைக்குச்  செல்லும் பேருந்தில் ஏறி அமர்ந்தாள் மங்களம்.  ஓட்டுநர் ரசனைக்காரர் போல. பேருந்து, நெடுஞ்சாலையில் பயணிக்க ஆரம்பித்த அடுத்த நொடி,’என்னைத் தொட்டு அள்ளிக்கொண்ட மன்னன்...

வே.நி.சூர்யா கவிதைகள்

1.மாபெரும் அஸ்தமனம் அந்திவானில் மகத்தான ரத்தத்துளி அதன் ஒளிப்பரிவாரங்களோடு அஸ்தமனமாகிக் கொண்டிருக்கிறது அனிச்சையாக என்னை நான் தொட்டுப்பார்க்கிறேன் ஆ! காற்றை தீண்டுவது போல அல்லவா உள்ளது தொடுகையுமில்லை தொடப்படுவதுமில்லை வேறெதுவோ நான்.. ஒரு வீட்டில் வசிப்பவனை மாதிரி எனக்குள் இருக்க வேண்டிய நான் எங்கே ஒருவேளை...

குறுங்கதை பரிசுப் போட்டி. – பரிசுப் பெற்ற குறுங்கதைகள்

முதல் பரிசு:   ரட்சகன் எழுதியவர் : கார்த்திக் பாலசுப்பிரமணியன் கிரில் திறக்கும் சத்தம் கேட்டதும் ஜார்ஜ் ஓடிவந்து வாலாட்டி நின்றான். தூரத்தில் போகும்படி விரட்டினேன். விடாமல் பின்னால் வந்தான். பார்லிஜி வாங்கிப்போடாமல் நகரமாட்டான். எல்லாம் ஹேமி...

பகற்கனவு

1 மிகச்சரியாக சொல்வதென்றால் அரைக்குறை விருப்பத்துடனும் தீர்மானிக்க முடியா தயக்கத்துடனுமேயே தாறுமாறாக இறங்கி ஓடிக்கொண்டிருந்தாள் பரிமளம். அந்த வேகமான நடையை ஓட்டமென்றுதான் சொல்லவேண்டும். சறுக்கத்துடன் சற்றே பள்ளமுமான அந்த குறுக்குப் பாதையில் மெல்லமாய் அடியெடுத்து வைத்து...

சீனு

  மூன்று மாதங்கள் கழித்து வீடு திரும்பிய போது முதலாவது ஜீவனாக வாசலில் நின்றுகொண்டிருந்தது சீனுதான். என்னைப் பார்த்ததும் அத்தனை உற்சாகம் அதன் முகத்தில். கழுத்து வரை பாய்ந்து பாய்ந்து உடல் பூராவும் தன்...

செர்ரி ஃப்ளாசம்

வினோத் அலுவலகத்துக்கு செல்வதற்க்காக, காரை இயக்கி வெளியே வந்த பின் கேரேஜின் கதவை ரிமோட்டில் மூடினான். அந்த கதவு இயங்கும் ஒலி கேட்டபின் அந்த நாளின் பரபரப்பு ஓய்ந்து அமைதியடைந்தாள் சம்யுக்தா. கொதித்துக்கொண்டிருந்த...

சுநீல் கங்கோபாத்தியாயின் “தன் வெளிப்பாடு” நாம் வெளிப்படும் தருணம்

வாசகனோடு உரையாடலொன்றை நிகழ்த்தவோ படைப்புடன் அந்தரங்கமாக நம்மை உணரச் செய்யவோ தலையணைத் தண்டி நாவல்கள்தான் தேவையென்ற எந்தக் கட்டாயமும் கிடையாது. தேவையென்னவோ கூர்ந்த அவதானிப்பும், கரிசனமும், முதிர்வும் வாய்க்கப்பெற்ற எழுத்தாளனின் படைப்பும், அதை...

ஆதவனின் படைப்புலகம்

தகவல் தொழில் நுட்பம் வளராத காலத்தில், வெகு தற்செயலாகத்தான் ஆதவனின் மரணச்செய்தியைப் படிக்க நேர்ந்தது. ஆதவனின் இரண்டு நாவல்களையும், அத்தனை சிறுகதைத் தொகுப்புகளையும், புழுதியில் வீணை என்ற நாடகத்தையும் படித்துப் பிரமித்திருந்த வாசகனுக்கு...

ரஜ்ம்

  தரையில் மல்லாந்து படுத்துக்கிடக்கிறேன். மரணம் ஒரு அரசியைப் போல் ஒவ்வொரு படிக்கட்டாக மெல்ல கீழே இறங்கி வந்து கொண்டிருக்கின்றது. காதிலிருந்து வடிந்து கொண்டிருக்கும் இரத்தம் தரையில் பரப்பியிருக்கும் பழுப்பு நிற கிரவல் மண்ணுடன்...