படைப்புகள்

கதைகள், கவிதைகள், தொடர்கள் உள்ளிட்ட நேரடி தமிழ் படைப்பாக்கங்கள்

நீலக்கண்கள்-ஐசக் தினேசன்

நூறு வருடங்களுக்கு முன்னால் எல்சினொரில் வாழ்ந்த ஒரு படகுத்தலைவன் தன் அழகிய இளம் மனைவி மேல் பெருங்காதல் கொண்டிருந்தான். காலப்போக்கில் தன்னுடைய முனைப்பாலும் உழைப்பாலும் நல்லதிருஷ்டத்தாலும் தனக்கென ஒரு கப்பல் வாங்கியபோது அதற்கு...

லீனா மணிமேகலை கவிதைகள்

கெட்ட செய்தி நல்ல செய்தி 1. உங்கள் வாசற்படியில் என்னை அடித்துக் கொன்றார்கள் நீங்கள் அழைக்கப்படாத ஊர்த் திருவிழாவிற்குப் பலியிடப்பட்ட என் விலா துண்டொன்றை உங்கள் மௌனத்திற்கான கொடையாகப் பெற்றுக் கொண்டீர்கள் கெட்ட செய்தி நான் சாகவில்லை உங்கள் கழுத்தில் தெறிகுண்டின் சில்லென புடைத்துக் கொண்டிருக்கும் என் குரலைக் குணப்படுத்தத் துடிக்கிறீர்கள் உங்கள் தோலில் குத்திய பச்சையெனப் படர்ந்து கொண்டிருக்கும்...

டெல்டாவின் புதிய குரல்-கதிர்பாரதி கவிதைகள் குறித்து -கண்டராதித்தன்

செங்கதிர்ச்செல்வன் என்ற அழகிய பெயர்கொண்ட கதிர்பாரதியின் முதல் தொகுப்பு மெசியாவிற்கு மூன்று மச்சங்கள், அவரது முதல் தொகுப்பிலிருந்தே மிகுந்த கவனம் பெற்றவராகத் தமிழ்க் கவிதையுலகிற்கு அறிமுகமாகிறார். பின்னர் ஆனந்தியின் பொருட்டு தாழப்பறக்கும் தட்டான்கள்...

தாமரைபாரதி கவிதைகள்

சோதனை 1. என்னைச்சோதனை செய்து பார்க்க,பரி சோதனை செய்து பார்க்க,சுய பரி சோதனை செய்து பார்க்க,என்னைத் தவிரச்சோதனை மாதிரிவேறு எது/யார்இருக்க முடியும் 2.இன்ப துன்பியல்நாடகம் இதுஇரு வேளைஇரு உணர்வுபோவதும் வருவதும்இல்லவும் உள்ளவும்ஒன்றே 3.பவளமல்லிகை உதிர்கிறதுஇளஞ்சிவப்புச் செம்பருத்தி மலர்கிறதுஒன்றில் நாற்றம்ஒன்றில்...

விமர்சகர் க.நா.சுப்ரமண்யம் எதிர்கொண்ட விமர்சனங்கள்

சிறுகதை, நாவல், கவிதை, மொழிபெயர்ப்பு, இதழ் பணி எனப் பல்வேறு இலக்கியச் செயல்பாடுகளுடன் தொடர்புடையவர் க.நா.சுப்ரமண்யம். ஆனாலும் இவர் விமர்சகர் என்ற நிலையிலேயே அதிகமும் கவனிக்கப்பட்டிருக்கிறார். தமிழில் புதிய விமர்சன மரபைக் கட்டமைக்கத்...

Prisoner #1056

1. மனவடுக்களின் காலம் Prisoner #1056 என்கின்ற இந்த சுயசரிதை நூலை இரண்டு பகுதிகளாகப் பிரித்துப் பார்க்கலாம். முதலாவது பகுதி ரோய் ரத்தினவேல் என்பவர் இலங்கையில் பெற்ற போர்க்கால வடுக்கள். மற்ற பகுதி கனடாவில்...

சதீஷ்குமார் சீனிவாசன் கவிதைகள்

1). சாட்சியமிருக்க நேர்ந்துவிட்டது எந்த அநீதியின் பிள்ளைகள்நாங்கள்?செய்த செய்யாத எல்லாவற்றுக்கும்சாட்சியமிருந்தபடி இருந்தோம்.அந்திகள் அவசியமா?அதுபோலபகல்களும் இரவுகளும்.அறுத்தோடும் காலத்தில்எம்மீன் என் மீன்அல்லதுதூண்டிலாகும் விதியாஅறுத்தறுத்துக்கடந்தால்வழியெங்கும் மணற்பாதைகள்வெகுதூர கானலின் மயக்கங்கள். 2). தொட்டதெல்லாம் பரிபூரணமாய் நிகழ்ந்தது அழிவுமதுவிடுதிகள்வேசையர் விடுதிகள்போதை வஸ்துக்கள்காதல்கள்பணம்நீதி கோரல்கள்எல்லாவற்றையும்தாண்டிநிகழ்ந்துகொண்டிருந்தது அதுதொட்டதெல்லாம்...

பேய் உழும் கொல்லை

(“தங்க நகைப் பாதை” என்ற வெளியாகவுள்ள நாவலின் ஓர் அத்தியாயம்) பெரிய முருகன் தண்ணீர் மோட்டாரை அணைத்துவிட்டு புங்க மரத்தடியில் உட்கார்ந்தார். கிணறு வற்றி அடியில் கரும்பாறைகள் புலப்பட்டன. நீண்ட நேரத்துக்குப் பின்தான் நீர்...

மனநோயின் மொழி

உளப்பிணி எதிர் மருத்துவம் (ஆன்டிசைக்கியாட்ரி) என்ன என்பதையும், அதனை ஒரு புத்தகமாகக் கொண்டுவந்து “மனநோயின் மொழி” என்று டேவிட் கூப்பர் எழுதியதை, தமிழில் லதா ராமகிருஷ்ணன் என்பவர் மொழியாக்கம் செய்துள்ளார். சந்தியா பதிப்பகம்...

நகுலாத்தை – தொன்ம உருவாக்கம்

நகுலாத்தையில் தொழிற்பட்டிருக்கும் மொழி நுட்பமானது, செறிவானது, அடர்ந்த குறியீட்டுப் பண்பு கொண்டது, பிரக்ஞையுடன் பிரயோகிக்கப்பட்டிருப்பது. புறக்காட்சி விவரிப்புகள் சூழல் உருவாக்கத்திற்கான அழகியல் கூறுகளாக (மட்டும்) இல்லாமல் நிகழ்த்துதல்களால் (performing the events) உருவாகி...