ஜப்பானிய இலக்கியச் சிறப்பிதழ்

கனலி கலை-இலக்கியச் சூழலியல் இணையதளம் வெளியிட்ட ஜப்பானிய கலை-இலக்கியச் சூழலியல் சிறப்பிதழ்.

கதிர்வீச்சின் நாயகி “மாயி-சான்”

ஜப்பானியர்களின் எழுச்சி நிலையைப் பற்றி எங்கேயாவது, எப்போதெல்லாம் பேசப்படுகின்றதோ, ஜப்பானிய உற்பத்திப் பொருட்கள் பற்றி உன்னத நற்சான்றிதழ் எங்கெல்லாம் வழங்கப்படுகின்றதோ, அப்படியான ஒவ்வொரு சம்பவங்களின் பின்னாலும் ஒரு கதிர்வீச்சு படிமம், ஒரு எண்ணெய்...

ஜப்பானியக் கவிதைகள்

ஜப்பானியக் கவிதை வாசிப்பு வித்தியாசமானது. பல ஆண்டுகளின் முன்னர் ஹைக்கூ எனும் கவிதை வடிவத்தை பிரெஞ்சு மொழியில் ஆர்வமுடன் வாசித்தேன். முதல் வாசிப்பில் சுலபமானதாகத் தெரிந்தாலும், இந்தச் சிறு கவிதைகளின் முழுமையான அர்த்தத்தை...

சிபுயா கிராஸிங்க்

1 அது மட்டும் தயைகூர்ந்து வேண்டாம் என்று திரும்ப திரும்ப நினைத்துக் கொண்டிருக்கும்போதே, அந்த காட்சி விரிந்தது. அகலமான சிபுயா கிராஸிங்.  சிபுயா ரயில் நிலையத்தை விட்டு, வெளியே வந்தவுடன் எதிரில் குறுக்கும் நெடுக்குமாக...

ரியுனொசுகே அகுதாகவாவின்” சுழலும் சக்கரங்கள்” | மரண விழைவு குறித்த அலைக்கழிப்பின் அழகியல்

“… சாதல் ஒரு கலை, மற்ற எல்லாவற்றையும் போல அதையும் நான் சிறப்பாகவே செய்கிறேன்” சில்வியா பிளாத். அமெரிக்க கவிஞர் சில்வியா பிளாத், ஹெம்மிங் வே, விர்ஜினியா வூல்ஃப், ஆத்மாநாம் என்று மனசிதைவுக்கு ஆட்பட்டு தற்கொலை செய்துகொண்ட படைப்பாளிகள்...

மூங்கில் வெட்டுபவரும் நிலாக்குழந்தையும்

வெகுகாலத்துக்கு முன், வயதான ஒருவர் மூங்கில்வெட்டிப் பிழைத்துவந்தார். அவர் ஒவ்வொரு நாளும் அதிகாலையிலேயே எழுந்து மலைக்குச் சென்றுவிடுவார். வானுயர்ந்த மூங்கில்களில் பசிய இறகுகள் துளிர்த்து  அடர்ந்து செழித்து வளைந்து கிடக்கும் காடுகளில் அலைந்து...

“ஆதிக்க மனோபாவத்துக்கு எதிராகவே எனது திரைப்படங்கள் உருவாக்கப்படுகின்றன” – மசாகி கோபயாஷி

திரைப்பட அழகியலுக்கும், ஆக்ரோஷமாக வெளிப்படும் சமூக விழிப்புணர்வு திரைப்படங்களுக்கும் இடையில் ஒரு மெல்லிய இணைப்பைப் பின்னுவதாக மசாகி கோபயாஷியின் திரைப்படங்கள் கருதப்படுகின்றன. இவரது புகழ்பெற்றத் திரைப்படமான ஒன்பது மணிநேரம் தொடர்ந்து ஓடக்கூடிய The...

தன்வெடிப்பின் நாயகன் : யுகியோ மிஷிமா – கடலின் வனப்பிலிருந்து வீழ்ந்த மனிதன்

கிமிடகே ஹிரோகா எனும் யுகியோ மிஷிமாவிற்கு பல முகங்கள் இருந்தாலும் அவை அனைத்துமே தனது அசலான முகமாக உலகின் பிரதிபலிக்கக் கூடிய அனைத்துப் பொருட்களிலும் காண விரும்பிய மரணத்தின் முகத்தை நவம்பர் 25,...

சாகவா சிகா கவிதைகள்

மதியம்   மலர் இதழ்களைப் போன்று மழை பொழிகிறது அதீத எடையினால் தாக்கப்பட்ட பூச்சிகள் மரத்தின் நிழலில் வீழ்கின்றன பெரும் சுவரொன்றின் மீதான மென் பூங்காற்றின் ஒலி சூரியனால், அலைகளினால் அமுக்கப்படுகின்றன   எனது எலும்புக்கூடு அவற்றின் மீது வெள்ளைப் பூக்களை பரப்புகிறது எண்ணங்கள் சிதறுபட, மீன்கள் குன்றின் மீதேறுகின்றன   இருண்மை கானம்   புதிய தரைவிரிப்பின்...

பார்வையாளர்

தன்னை முரயாமா என அழைத்துக்கொண்ட இந்த மனிதர், இந்தப் போர் வீரர், ஏறத்தாழ மதிய வேளையில் வந்தார். நான் முதன் முதலில், இவர் உணவு வேண்டி வந்திருப்பதாக அல்லது அவர்களில் பலரைப் போலவே,...

உள்நோக்கிச் செல்லும் குறுகிய பாதை – மட்சுவோ பாஷோ

மட்சுவா பாஷோ (1644-1694) பாஷோவைக் குறித்து நமக்கு அறிமுகம் தேவையில்லை. அந்தரங்கமான அளவில், அவருக்கு ஏற்கனவே தமிழ் கவிஞர் என்ற இடம் அளிக்கப்பட்டுவிட்டது. அவரை நகலெடுத்தல், மொழியாக்கம் என நிறைய நடந்துவிட்டன நம் சூழலில்....