ஜப்பானிய இலக்கியச் சிறப்பிதழ்

கனலி கலை-இலக்கியச் சூழலியல் இணையதளம் வெளியிட்ட ஜப்பானிய கலை-இலக்கியச் சூழலியல் சிறப்பிதழ்.

ஜப்பான் இலக்கிய மரபு: மன்யோஷூ – கொகின்ஷூ – ஹைக்கூ

இயற்கை ஒரு போதும் மனிதர்களுக்கு எதிராக இருந்ததில்லை. அது நேசமிக்கது. உலகத்தின் சீரான சுழற்சிக்கு அனுசரணையாக இருப்பது. சுயநலத்துக்காக அதனுடனான விரோதச் செயல்களில் முனையும்போது தனது ஆட்சேபத்தைத் துளி தெரிவிக்கிறது. மனித சமூகமே...

மூங்கில் வெட்டுபவரும் நிலாக்குழந்தையும்

வெகுகாலத்துக்கு முன், வயதான ஒருவர் மூங்கில்வெட்டிப் பிழைத்துவந்தார். அவர் ஒவ்வொரு நாளும் அதிகாலையிலேயே எழுந்து மலைக்குச் சென்றுவிடுவார். வானுயர்ந்த மூங்கில்களில் பசிய இறகுகள் துளிர்த்து  அடர்ந்து செழித்து வளைந்து கிடக்கும் காடுகளில் அலைந்து...

ஒரு முகமூடியின் ஒப்புதல் வாக்குமூலம்

எனது எதிர்பார்ப்புகளுக்கு நேர்மாறாக, நான் அச்சங்கொண்டிருந்த தினசரி வாழ்க்கை தான் தொடங்குவதற்கான சின்ன சமிக்ஞையையும் வழங்கவில்லை. மாறாக, தேசம் ஏதோவொரு வகைக் குடியுரிமைப் போரில் ஈடுபட்டிருப்பதாகத் தெரிந்தது, உண்மையான போரின் போதிருந்ததைக் காட்டிலும்...

ஒரு வலசைப் பறவை

“சதை புலனின்பத்தின் ஆடையை உடுத்திக் கொள்கிறது. இதயம், வேதனையை” டாண்டே அள்கியரி.   பின் இலையுதிர் காலத்தின் ஓர் இரவில், ஹிபியா பொது அரங்கில் இசை நிகழ்ச்சியை முடித்து கணக்கிலடங்கா எண்ணிக்கையில் காகங்கள், பல்வேறு உருவடிவங்களில்...

ஒஸாகி ஹொசாய்: நாள் முழுவதும் வார்த்தைகளற்று.

25 தேர்ந்தெடுத்த ஹைக்கூ கவிதைகள்   ஊருக்கு வெளியே துரத்தப்பட்ட தாமதமாக வந்த நிலவு, காத்துக் கிடக்கிறது     சரியான நேரத்தில் வந்து ஒரு பிச்சைக்காரர் என்னைச் சந்தித்தார்   என் நகங்கள் வளர்ந்து கொண்டே செல்கின்றன என் தனிமையான உடலிலிருந்து   என்ன ஒரு...

தேன்

லா காசா டி கொபியர்ணோ முன்பு இருந்த பிளாசாவில் உணர்வுகளற்றுப் போய் நான் அமர்ந்திருந்தேன். முதல் பார்வையிலேயே ஜேப்படித் திருடர்கள் என அப்பட்டமாகத் தெரிகிற, சந்தேகப்படும்படியான சில மனிதர்கள் சுற்றிலும் நின்று கொண்டிருந்தார்கள்....

உள்நோக்கிச் செல்லும் குறுகிய பாதை – மட்சுவோ பாஷோ

மட்சுவா பாஷோ (1644-1694) பாஷோவைக் குறித்து நமக்கு அறிமுகம் தேவையில்லை. அந்தரங்கமான அளவில், அவருக்கு ஏற்கனவே தமிழ் கவிஞர் என்ற இடம் அளிக்கப்பட்டுவிட்டது. அவரை நகலெடுத்தல், மொழியாக்கம் என நிறைய நடந்துவிட்டன நம் சூழலில்....

நீல நிலவு

சில வேளைகளில் கடந்த காலத்தின் குறிப்பிட்ட சில நிகழ்வுகளை நினைத்துப் பார்த்து அவை எவ்விதம் தொடங்கின என்று குழப்பமடைந்து விடுவேன். மேகங்களேதுமில்லாமல் பளிச்சிட்ட வானத்துடன் மிளிர்ந்த அழகிய நாள் அது, டோக்கியோ மாநகரத்தின் புறநகரில்...

ஜப்பானியக் கவிதைகள்

ஜப்பானியக் கவிதை வாசிப்பு வித்தியாசமானது. பல ஆண்டுகளின் முன்னர் ஹைக்கூ எனும் கவிதை வடிவத்தை பிரெஞ்சு மொழியில் ஆர்வமுடன் வாசித்தேன். முதல் வாசிப்பில் சுலபமானதாகத் தெரிந்தாலும், இந்தச் சிறு கவிதைகளின் முழுமையான அர்த்தத்தை...

மியெகோ கவகமி: ‘பெண்கள் இனிமேலும் வாய்மூடி மௌனியாய் இருப்பதற்கில்லை’

  ஜப்பானில் உள்ள பாரம்பரியவாதிகள் அவரது பெண்ணிய நாவலை வெறுத்தனர், ஆனால் ‘மார்பகங்களும் கருமுட்டைகளும்’ (Breasts and Eggs) மிகப் பெரிய அளவில் விற்பனையானது. ஆண்களுக்கான தனிச்சலுகை, கீழைத்தேய மிகைவழக்குச் சொற்றொடர்கள்... ஹருகி முரகாமி...