கனவில் நனைந்த மலர்
அந்த அப்பார்ட்மெண்ட் எங்கும் பச்சை நிறமொத்ததாய் இருந்தது. முகமற்ற பொம்மைகளின் வரைபடங்கள் பென்சில் ஸ்கெட்சாகவோ வண்ணக்கலவையாகவோ சுவரெங்கும் பரவிக் கிடந்தன. வானமும் கடலும் சேர்ந்தது போன்ற படம் ஜெசிந்தாவை ஈர்த்துக் கொண்டே இருந்தது....
குரல்கள்
வராண்டா கிரில் வழியாக மதில் சுவரிலிருந்து மரத்துக்குத் தாவிய அணிலைப் பார்த்தார். இதே வராண்டா கிரில்லை பிடித்துக்கொண்டு அணிலைக் கண்டவுடன் குதித்த தன் மகனை நினைத்துக்கொண்டார். சூரிய ஒளி க்ரில்லில் இருந்த இரும்புப்...
நீரை மகேந்திரன் கவிதைகள்
1.
அப்பாவின் கால்கள் மரமாகி இருந்தன!
அப்பாவின் கால்கள் ஆலமரம்போல உருக்கொண்டிருந்தன.
அதிலிருந்து கிளை பரவியிருந்தோம்
பூக்களும் கனிகளுமாக
வசந்தம் கொண்ட காலத்தில்
கீழவாடையின் கொடும் மின்னல்போல,
துயரச் செய்தியானது அப்பாவின் இழப்பு.
ஆயிரங்கரங்களில்
பலங்கொண்ட மட்டும் யாரோ மரத்தை ஆட்டினார்கள்
கொப்புகள் உதிர்ந்தன,
கூடுகள் சிதறின,
இன்றோ நாளையோ...
அர்ஜூன்ராச்-கவிதைகள்
1மதிப்பிற்குரிய கல்லாப்பெட்டி அவர்கள்...தன் கண்டடைதல்களைமேல் கவனிப்பிற்குக் கொண்டுசெல்ல"நீங்கள் தான் சரி" யெனயாரை அழைப்பு விடுப்பதுயாரிடம் கத்திரியைக் கையளிப்பதுமற்றும்ரிப்பன் வெட்டித்தொடங்கச்செய்வதுதொடங்கிவைக்க ஒருவர் கிடைத்துவிடுகிறார்ரசனைகளை அளவளாவிச் சுற்றிச் சுற்றிப் பார்த்துவிட்டுநேரே கல்லாப்பெட்டியிடம் செல்கிறார்.(தொடக்கத்திலேயே இன்னமும் வாழ்ந்து...
நயனக்கொள்ளை
காலை நடைப்பயிற்சியை பூங்காவில் முடித்துவிட்டுத் திரும்பும் வழியில் வழக்கம்போல அப்பாவைப் பார்த்து உரையாடுவதற்காக வீட்டுக்கு வந்தார் அருணாசலம் மாமா. ஒரு காலத்தில் இரண்டு பேரும் வருஷக்கணக்காக ஒன்றாக நடந்து சென்றவர்கள். ஆறு வருஷங்களுக்கு...
புல்லின் வாசம் -ஆ.ஆனந்தன்
காலை வெயில் கொஞ்சம் சுளீரென்று உடம்பைத் தாக்கிக் கொண்டிருந்தது. கையில் வைத்திருந்த பைக்குள் இருக்கும் பழங்களின் கனத்தாலும் வேகமாக நடப்பதும் கொஞ்சம் மெதுவாக நடப்பதுமாக நான் தெருக்களைக் கடந்து கொண்டிருந்தேன்.சென்ற வருடம் வீடுவரை...
ஓங்குபனை-அருணா சிற்றரசு
இதுவரை யாருமே நடந்திடாத அன்றைய நாளுக்கான புதுப்புழுதியுடன் சுருளிலிருந்து விடுபட்ட பந்திப்பாய் போல விரிக்கப்பட்டிருந்தது அந்தக் குறுஞ்சாலை. பக்கவாட்டிற்குப் பனைமரங்களையும், தலைமாட்டிற்கோர் ஆலமரமுமாய் கிளைப் பாதைகளைப் பரப்பிக் கொண்டு கீழ்த்திசையிலிருந்து இன்னும் கிளம்பாத...
பேரருவியில் கரைந்த ஆவுடை அக்காள்-கண்டராதித்தன்
பாடுதற்கு முன்னிடத்தில் பழுது குறை வாராமல்
நிறைவேற்றி வை தாயே எந்தன் மனோன்மணியே
அபத்தமதிருந்தால் அறிந்த மஹாத்மாக்கள்
பிழை இன்னதென்று சொல்லி பொறுத்தருள வேண்டுமம்மா
வேதாந்த அம்மானை –
ஆவுடையக்காள் பாடல் திரட்டு.
கிழக்கு கர்நாடகத்தின் நந்திதுர்கா மலைப்பிரதேசத்திலிருந்து தொடங்கும் தென்பெண்ணை...
செல்வசங்கரன் கவிதைகள்
லலிதா அக்கா
எனக்குச் சின்ன வயதில் பக்கத்து வீட்டில்லலிதா அக்கா இருந்தார்எனக்குச் சின்ன வயதில் ரயிலில் மோதி அவர் இறந்து போனார்எனக்குச் சின்ன வயதில் அவருக்கு கவிதா மஞ்சு என இரண்டு மகள்கள்எனக்குச் சின்ன...
காத்தாடி கவிதைகள்-லீனா மணிமேகலை
கைவிடப்பட்ட மூச்சுகளைப் பிடித்துப் பிடித்துஉடலுக்குள் ஏற்றுகிறேன்ஆனாலும் எட்டு வைப்பதற்குள்தட்டையாகிவிடுகிறதுகாற்றுப் போன உடலை மூங்கிலில் கட்டி காற்றாடியாக்குகிறேன்கயிறு என் நஞ்சுக் கொடிமாஞ்சாவில் கலந்திருப்பதுஎன் எலும்புத் துகள்பசை என் ரத்தம்பறத்தலின் இடையில்வரும் தலைகள் ஏன் அறுந்து விழுகின்றனஎன்று...