படைப்புகள்

கதைகள், கவிதைகள், தொடர்கள் உள்ளிட்ட நேரடி தமிழ் படைப்பாக்கங்கள்

கோவிந்தன்-விவேகானந்தன் [முழுமையைத் தேடும் முழுமையற்ற புள்ளிகள்]

கத்தரிக்கோல்களின் சப்தம்: ஃபோர்ஸெப்ஸ்களின் சப்தம்: பாட்டில்கள் ஒன்றோடொன்று மோதிக்கொள்ளும் சப்தம்: கத்தரிக்கோல்களும், ஃபோர்ஸெப்ஸ்களும் இரும்புப் பாத்திரத்தில் விழும்போது எழுகின்ற ஒரு சங்கீத சப்தம்: இந்த சங்கீத சப்தம்தான் இதயத்திற்கு ஒருபோதும் இதமளிக்காத, மனதிற்கு...

குர் அதுல் ஐன் ஹைதரின் “அக்னி நதி” (கண்ணீரைப் பின் தொடர்தல்)

பதினைந்து வருடம் முன்பு காசிக்குச் சென்றிருந்தேன். மணிகர்ணிகா கட்டத்தில் கங்கையின் கலங்கல் நீரில் கால் நனைத்து நின்றபோது ஒருவகையான ஊமைவலி நெஞ்சில் ஏற்பட்டது. கரையில் பாழடைந்த புராதனக் கட்டிடங்கள். கரிய திராவகத்தை உமிழும்...

ஊறா வறுமுலை

குதிரை கனைக்கும் அரவம் மிக அருகில் கேட்டது. பேச்சி உள்ளுக்குள் பதறி எழுந்தாள். எதிரில் எண்ணெய்யில் மினுங்கிய குதிரை நின்று கொண்டிருந்தது. ஆராட்டப்பட்ட மஞ்சள் நீர்த்துளிகள் இன்னும் அதன் மீது உலர்ந்திருக்கவில்லை. சந்தனமும்,...

அவரவர் நியாயம்

வெளியே காவல் நிலையத்தின் வாசலில் மூன்று சிறு குழுக்கள் நின்றிருந்தன. இப்படி யாராவது காவல் நிலையத்திற்கு வெளியே நின்றுகொண்டிருந்தால், உள்ளே ஏதோ ஒரு பஞ்சாயத்து நடந்துகொண்டிருக்கிறது என்று அர்த்தம். மூன்று குழுக்களில் இரண்டு குழுக்கள்...

சூரம்பாடு

சூரம்பாடு நடக்கும் போதுதான் அவனது இறுதி மூச்சு என்று நாங்கள் நால்வரும் முடிவு செய்தோம். அது அப்படித்தான் முடியுமென்பது எனக்குத் தெரிந்த விசயம் தான். என் பேச்சை மீறி மற்றவர்கள் ஏதும் சொல்லிவிட...

அந்திமந்தாரை

‘பிரியமுள்ள அக்காவிற்கு, ஆண்டவரின் மேலுள்ள விசுவாசம் என்னை வழிநடத்துகிறது. உங்களுக்கு நெடுநாளாகக் கடிதம் எழுதவேண்டும் என்று தோன்றியது. ஆனால் எல்லாமுமே அதற்குரிய நேரத்தில் தான் நடக்கவேண்டும் என இருக்கிறது போல. ஒரு அசந்தர்ப்பத்தில் நாம் இருவரும்...

ஓணி

1 சாலையெங்கும் படர்ந்திருந்த கொன்றை மலர்களை முடிந்தவரை கூட்டியாகிவிட்டது. அந்த நெடுஞ்சாலையின் வலது முடுக்கின் விளிம்பில் சேர்த்துக் குவிக்கப்பட்ட கொன்றைக் குவியலை இரு கைகளாலும் அள்ளியெடுத்து தடுப்போரம் அலர்ந்துநின்ற கொன்றை மரங்களுக்கடியில் விசிறிக் கொண்டிருந்தாள்...

காவு

கமலாவால் தூங்கவே முடியவில்லை. இரவெல்லாம், எதிர்காலமே இருண்டுபோன எண்ணங்களில் நித்திரை தொலைந்து போனது. அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்த பிள்ளைகளை அணைத்தபடி அறையின் இருட்டையே பார்த்துக் கிடந்தாள்.  சூரியன் உதிக்காமலேயே பொழுது மெல்ல விடிந்தபோது, மழை...

சமரசம் மலர்ஸ்

என்னதான் இருந்தாலும் கொடியாள் ஆளொரு விண்ணிதான் என தன்னையறியாமல் உரத்துக் கூறிவிட்டதை உணர்ந்து, தான் கூறியதை  யாராவது கவனித்திருப்பார்களா எனத் திரும்பிப் பார்த்தார் உலகளந்தபிள்ளை.  குரல் கொட்டாவியோடு  கலந்திருந்ததாலோ என்னவோ ஒருவருக்கும் விளங்கியிருக்கவில்லை. மெல்லிய...

பையுங்-ஷூல் ஹான் : மிகச் சுருக்கமான அறிமுகம்

நவதாராளவாத உலகில் 'சுதந்திரம்' என்பது என்னவாக இருக்கிறது என்பதை பல்வேறு சிந்தனையாளர்கள் கேள்விக்குட்படுத்தியுள்ளனர். அவர்களுள் முக்கியமானவர் பையுங் ஷூல் ஹான் (Byung-Chul Han). சுதந்திரத்தின் வழியாகவே தற்போது கட்டுப்பாடு சாத்தியமாகிறது என்பார். தொழில்நுட்பங்களைச் சுவீகரித்துக்கொண்டு வளர்ந்த நவதாராளவாத...