படைப்புகள்

கதைகள், கவிதைகள், தொடர்கள் உள்ளிட்ட நேரடி தமிழ் படைப்பாக்கங்கள்

வின்சென்ட் வான்கோவின் மஞ்சளும் வெண்கல மஞ்சளும்

1 இருளும் ஒளியும் சமமாய்ப் புணர்ந்த சித்திரத்தில் அவித்த உருளைக் கிழங்கைப் புசிக்கிறவர்களின் துயர விகாசம் கழுவாத வெண்கலக் கும்பா மஞ்சளுடன் கரைகஞ்சி குடிப்பவனின் மனவிலக்கம். 2 அங்கம் அறுபட்டு மரணித்த உறவின் வாய்க்குள் நினைவுப் பால் நனைத்த வீர ராயன் காசுகளாய் வின்சென்ட்டின் மஞ்சள் கறுத்த சொற்கள் கவிதைக்குள். 3 வின்சென்ட்டின் மஞ்சள் நாற்காலித் தனிமை புகையிலையும் புகைக் குழாயும் இருக்கை...

மதுசூதன் கவிதைகள்

முரண்களின் முள்வேலி. இந்தப் பெரும் பாறையை எப்படியெல்லாம் செதுக்கியிருக்கலாம் ? இரண்யனைக் கிழித்த நரசிம்மனாக, விம்மிய முலைகளோடு விளக்கேந்தும் சிலையாக, ஒரு மலைக் கோயிலுக்கு முதலிரண்டு படியாக... ஒன்றுமாகாததை யோசித்து என்ன வேலை ? இப்போதைக்கு ஒரு காகம், ஓணான் குஞ்சைக் குத்திக் கிழிக்க...

சாகிப்கிரான் கவிதைகள்

கவி நிரம்பியிருந்தது அறை. எவ்வளவு புரட்டியும் அந்த நோட்டில் ஏதுமெழுதாத பழுப்பை உற்றுப் பார்த்தான் சுவரின் ஓவியத்துள் ஒளிந்திருந்து அவன் சிரித்ததை ஒரு கணம் திரும்பி மீண்ட இவன். ஏதுமற்றது வெளி. பதில் நீதானே, உன் பெயர்தானே என்றான். ஊமையாக, செவிடாக இருந்தேன். நன்றாக குலுக்கிய ஒரு பாட்டில் போலாகாதிருக்க முயன்றேன். நான் ஒரு...

அழுகைக்கு மார்பை திருப்புதல்

இந்த வாழ்வில் என்ன இருக்கிறதென தேடினேன் என்னோடு ஒரு மருத்துவச்சியும் தேடினாள் அப்போதுதான் முதன்முறையாக சுடரைப் பெற்றெடுத்துக்கொண்டிருந்த பெண்ணுறுப்பை பார்த்தேன் அச்சு அசல் அது மாடத்தில் விளக்கெரிவதை ஒத்திருந்தது நெல்லிக்கட்டையூரிய இனிப்புக்கிணற்றின் தண்ணீரை கைகளில் அள்ளினேன் அதன் முதல் சுவாசம் பின்னப்பட்டது ஆகாசமயத்தோடு வலியும்...

நுரைப் பூக்கள்

மார்னிங் குளோரிக் கொடியின் நீலப் பூக்கள் பால்கனியில் உதிர்ந்து கொண்டிருந்தன. நகர நெரிசலுக்குத் தொடர்பின்றி புன்னை மரங்கள் பிரம்மாண்டக் குடைகளாக வாசலில் விரிந்தன. மழை வலுத்து ஆங்காரமாய்ப் பெய்தது. அதன் ஆக்ரோஷத்தில் அந்தச்...

நீர்க்கன்னிகள்

ஒற்றை வாசற்படிக்குள் இரண்டு உள்வீடுகள் இருந்தன. சாரதாவுக்கும் கற்பகத்திற்குமான வீடு வகிடாக பிரிக்கப்பட்டு வாசலுக்கு முன் இரண்டு திண்ணைகளும், முன்னொரு வீடும் பின்னொரு வீடுமாக இருந்தன.  உள்நடையின் மத்தியில் பாத்திரங்கள் புலங்குவதற்கும், கலக்கட்டு,...

தற்கொலை முகம்

நீண்ட நாட்கள் இடைவெளிக்குபின் தஞ்சாவூரில் பழைய பேருந்து நிலையம் அருகில் மாதவனைப் பார்த்தேன். முற்றிலும் மாறியிருந்தார். அவர் முகத்தில் இருந்த தூக்கமின்மை கோடுகள் மறைந்திருந்தன. கண்களில் இருந்த வெறித்தப் பார்வை மாறியிருந்தது. எதையோ...

பச்சை நிறக் கனவு

குளித்துவிட்டு இடுப்பில் கட்டிய பச்சை நிறத் துண்டோடு சாப்பிட கீழே உட்கார்ந்தான் மனோகரன். மே மாத காலை வெய்யிலின் உக்கிரம் மேலே சுற்றிக்கொண்டிருந்த மின் விசிறியை ஏளனப்படுத்தியது. மார்பில் முத்து முத்தாய் அரும்பிய...

பாவ மன்னிப்பு

புனித லூசையப்பு தேவாலயத்தின் பாதிரியார் ஆஸ்திரோவ்ஸ்கிக்கு பெருத்த சங்கடமாகப் போயிற்று. படபடத்த தேகத்தோடு கூண்டுக்குள் கைகளை நுழைத்து தன் கைகளை இறுகப் பற்றிக்கொண்டு ஒரு சிறுவனைப் போல் அழுதுகொண்டிருக்கும் துர்கனேவ்வின் கைகளை விலத்திக்...

உருவாஞ் சுருக்கு

"நாகமணி கெணத்துல குதிச்சிட்டா. யாராவது காப்பாத்த வாங்களே’’ என்ற குரல் கேட்டு ஆலமர நிழலில் சீட்டாடிக் கொண்டிருந்த நானும் நண்பர்களும் ஓடினோம். மதிய நேரம் என்பதால் தெருவில் ஆட்களின் நடமாட்டம் அதிகம் இருக்கவில்லை. தன்...