படைப்புகள்

கதைகள், கவிதைகள், தொடர்கள் உள்ளிட்ட நேரடி தமிழ் படைப்பாக்கங்கள்

சுஜய் ரகு கவிதைகள்

1 பித்தானவள் தொடர்ந்து தேடிக்கொண்டே இருந்தாள் ஒரு பஸ் நிறுத்தத்திற்கு முன்னால் கிடந்ததாக எல்லோரும் சொன்னார்கள் அதைக் கேட்டு அவள் வெடித்துச் சிரித்தாள் மீண்டும் மீண்டும் தொடர்ந்து சிரித்தாள் சொன்னவர்கள் ஒருசேரத் திரும்பிப் பார்த்தார்கள் ஒன்றுமேயில்லை அங்கும் அதே வெடித்த சிரிப்பு   2 "ஊரே காலியாகிவிட்டது .." எறும்புகளின் தலைவன் சொன்னான் தலைவி சிவந்த கொடுக்கு கொண்டு அவனை...

தினகரன் கவிதைகள்

சற்று முன்பே பார்த்துவிட்டேன்   உடம்பு முடியாமல் கிடக்கிற அவனுடைய வீட்டிற்குப் போகிற வழியில் உதிர்ந்து என் மீது விழுந்தது பழுத்து, பச்சைக் காணாது போய் நடுநரம்பில் கடமைக்கென ஒட்டி இணைந்திருக்கும் கிளை நரம்புகளைக் கொண்டதொரு இலை. அதை உதறிவிட்டு நடந்து நடந்து இந்தக் கதவைத் தட்டினேன் இருமியபடி சட்டை அணியாமல் கதவைத் திறந்த அவனை சற்று முன்புதான் எங்கோ உதறிவிட்டது போல இருந்தது    கருணையில்லாத...

அன்பின் ஒளிர்தல்கள்… ந.பெரியசாமி

கவிதைகள் தேங்கிக் கிடக்கும் நீர் அல்ல. வழிந்து ஓடிக்கொண்டிருக்கும் நதி. தன்னை புதுப்பித்துக் கொண்டே ஓடும் நிலத்தையும், அதன் விளைவிப்பையும் செழிப்போடு வைத்திருக்கும் தன்மை கொண்டது. நிகழ்ந்து கொண்டிருக்கும் புதுப்புது முயற்சிகள் மொழியை...

யதார்த்தத்திலிருந்து நிகழ்வுகளால் உருவாக்கப்பட்ட கற்பனைக்கதை (பிராப்ளம்ஸ்கி விடுதி மொழிபெயர்ப்பு நாவலை முன்வைத்து) இரா.சசிகலாதேவி

உலகின் பல நாடுகளைப்போல பெல்ஜியம் நீண்ட வரலாற்றைக் கொண்டது. பல நூற்றாண்டுகளாக வெவ்வேறு சக்திகளால் கட்டுப்படுத்தப்பட்டாலும், உலகப்போரில் ஜெர்மனி பெல்ஜியத்தை ஆக்கிரமித்தது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. 1944 ஆண்டுவரை ஜெர்மனியின் கட்டுப்பாட்டில் பெல்ஜியம் இருந்தது....

எந்த நூற்றாண்டிலும் அணைந்து விடாத மெழுகுவர்த்தி அவன்  தஸ்தயெவ்ஸ்கி 200ம் ஆண்டுச்...

இந்தத் தலைப்பை வைத்த பின்பு வெகுநேரம் சிந்தித்துக் கொண்டிருந்தேன். உண்மையில் தஸ்தயெவ்ஸ்கி 200-வது ஆண்டுச் சிறப்பிதழிற்கு முன்னுரை என்கிற பெயரில் என்ன எழுதிவிடப் போகிறேன் என்று. கடந்த ஆறு மாதங்களுக்கு மேல் இந்தச்...

தாஸ்தயேவ்ஸ்கி என்ற கலைஞன் -சுந்தர ராமசாமி

தாஸ்தயேவ்ஸ்கியின் படைப்புலகம் நம் மனதில் உருவாக்கும் பிம்பம் என்ன? ஒரு இருட்குகை. முடிவற்றது. கிளைகள் பிரிந்து அக்கிளைகளிலிருந்து மேலும் கிளைகள் பிரிந்து செல்வது. அந்த இருட்குகைக்குள் மலைச் சிகரங்கள். பள்ளத்தாக்குகள். பாலைவனங்கள். வனாந்தரம்....

தோஸ்தோவ்ஸ்கி: பல குரல் தன்மை-எஸ்.வி.ராஜதுரை

தோஸ்தோவ்ஸ்கி படைப்புகளில் நான் முதன்முதலாகப் படித்தது, அவரது சிறையனுபவத்தை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட ஒரு சிறுநாவல்: ‘சாவு வீட்டுக் குறிப்புகள்’ (Notes from the Dead House). இருபத்திரண்டு ஆண்டுகளுக்கு முன் நான்...

தாஸ்தாயெவ்ஸ்கி: சூரியனின் முகம்படா ஊற்றுகள் -சி. மோகன்

கடவுளின் இருப்பு குறித்தும், கடவுளுக்கும் மனிதனுக்குமான உறவு குறித்தும் எழுந்த கேள்விகளுக்கு விடை தேடிச்சென்ற 19-ஆம் நூற்றாண்டின் சிந்தனைவளம் கடவுளின் மரணத்தைக் கண்டறிந்தது. கடவுள் சமாதியானதன் தொடர்ச்சியாக, மனித வாழ்வின் இலக்கு, தர்மங்கள்...

மன்னிக்காதே நெல்லி! ‘ஜெயமோகன்’

நெல்லி, பரந்த பீட்டர்ஸ்பர்க் நகரின் தெருக்களில் பனி கொட்டும் இரவில், எதிர்பார்க்க ஏதுமின்றி, நிற்க நேரிட்ட சின்னஞ்சிறு ஜீவன். கடுங்குளிரில் நீல நரம்புகள் புடைத்து, அவளுடைய வெற்றுப் பாதங்கள் விறைத்துவிட்டிருந்தன. அவற்றை விடவும்...

தஸ்தயெவ்ஸ்கி – மனங்களின் வித்தகர்

’’உலக இலக்கியத்தில் தலை சிறந்த நாவல் டால்ஸ்டாயின் ‘போரும் அமைதியும்’என்று கூறப்பட்டாலும் கூட உலக இலக்கியத்தில் தலை சிறந்த நாவலாசிரியர் யார் என்று கேட்டால் ஃபியோதர் தஸ்தயெவ்ஸ்கிதான் என்று விமர்சகர்கள் சந்தேகத்துக்கிடமின்றி சொல்லி...