படைப்புகள்

கதைகள், கவிதைகள், தொடர்கள் உள்ளிட்ட நேரடி தமிழ் படைப்பாக்கங்கள்

எழுத்துக்களில் கரைந்த நிழல்கள்

பொதுவாக சிறுகதைகளுக்கான கதைவெளி சாத்தியங்கள் நாவல்களுக்கு வாய்க்கப் பெறுவதில்லை. காரணம் சிறுகதைகளால் ஒரு சிறு நினைவுகளைக் கூட களமாகக் கொண்டு இயங்க முடிகிறது. ஆனால் நாவல்கள் குறைந்தபட்சம் அந்த நினைவுகள் உறைந்துள்ள வெளியை...

கட்டக்கால் வேட்டை

தேர்ந்த விளையாட்டு வீரனின் சாயலில் வேல் கம்பையெடுத்து, முடி முளைத்த ராத்திரியென ஓடும் தடிபன்றியின் முன்னெஞ்சுக்கு குறிவைத்து எறிகிறேன். கூரினை நெளித்துப்போட்டு வேகமெடுக்கிறது. தலைக்கு வீசிய ஐந்தாறு வெங்காய வெடிகளுக்கும் பாய்ச்சல் குறையவில்லை. பின்னால் கேட்கும் குட்டிகளின் அலறலுக்கு வெறிவீறிட திரும்பிய பன்றி எனை மல்லாத்திவிட்டு ஈரிரண்டு...

ச.துரை கவிதைகள்

செம்மந்தி கிழவி தனது விற்பனை மீன்களுக்குத் தானாகவே புதுப் பெயரிடுவாள் தரிசு தாண்டி சர்ச் போகும் வழியே அந்தக் கூடையை தூக்கித்தாவென்றாள் என்ன மீனென்று கேட்டேன் செம்மந்தி என்றாள் வித்தியாசமான பெயர் உச்சரித்துக்கொண்டே கரையில் நிற்கிறேன் அதைக் கேட்டதும் கடல் தனது உடலை பாத்திரத்தைப் போல...

பெரு விஷ்ணுகுமார் கவிதைகள்

1.) கெடாவெட்டுதல் இந்த வருடம் அவ்வீட்டில் நிச்சயமாய் ஒரு உயிர் போகுமென்கிறது ஒப்புக்கொடுக்காமல் நிற்கும் கிடா. முதியவருக்கோ இன்னும் கொஞ்சநாள் இருக்கலாமெனத் தோன்றுகிறது ஒருவேளை அது குறிப்பது  என்னைத்தானோ என பயத்திலொரு உதைவிட்டது வயிற்றிலிருக்கும் சிசு ச்சே… ச்சே… நாம் வளர்த்த ஆடு அவ்வளவு...

பத்மபாரதி கவிதைகள்

வழித்துணை அனாந்தர ஊஞ்சலிலிருந்து தவறி விழுந்து ஓவென்று அழுகிற அவள் சின்னஞ்சிறுமி எம்பிக்குதித்து அவள் கன்னத்தை வருடும் செல்ல நாய்க்குட்டியின் வால்சுழட்டலில் வலி கரைந்தே போகிறது சதா கோபிக்கும் அப்பா தவறவிட்ட பொற்கணங்கள் முப்பது முக்கோடி அப்படி ரகசியங்களால் வளரும் சிறுமியின் பின்னலிடையில் அம்மா சொருகிய வேப்பங்கொழுந்து பச்சை மாறாது...

பெருமாள் முருகனின் மூவியல் புனைவுகள்

 பண்பாடுகளின்  நிழல்பிரதிகளைப் பரிசீலிப்பதன் சாத்தியப்பட்ட எல்லைகள் பெருமாள் முருகனின் மூவியல் புனைவுகள் ( மாதொருபாகன் –அர்த்தநாரீ- ஆலவாயன்)    பண்பாட்டு அமைப்புகள் எப்போதுமே ஒரு மூடுண்ட அமைப்பாக தொடர்ந்து பிழைத்திருக்க முடியாது. அவை தம்மைத் தற்காத்துக்கொள்ள...

உணர்வு

         வள்ளியம்மாள் தனது கணவன் மகாராஜாவை ஆஸ்பத்திரியில் சேர்த்து இரண்டு நாட்கள் ஆயிற்று. பெரிதாக வீட்டை விட்டு வெளியே வராதவள் பலவித டெஸ்ட்கள், ஸ்கேன் என்று இரண்டு நாட்களில்...

கெவி

சந்ருவுக்கு ரெண்டு நிமிடங்களுக்கு முன்பு வரையிலும் கூட அந்த மங்கலான வெளிச்சத்தில் யாரோ இருப்பது போலத்தான் தெரிந்தது. யாரென்பதில் அப்போது இருந்த ஊர்சிதமும், திடமும், தூக்கம் களையும் போது சவலையாகிப்  போயிருந்தது. இழுத்துப்...

முத்தத்துக்கு..

வலது பக்கம் மேல் உதட்டு ஓரத்தில் மறைந்திருந்த மீசையின் வெள்ளை முடியை நறுக்கினேன். வெள்ளையான பிறகு முடிகளுக்கு இத்தனை மினுமினுப்பு எங்கிருந்து வருகிறதோ.. உள்ளங்கையில் வைத்துப் பார்த்து.. ’ப்பூ..’ என ஊதி விட்டேன்....

பக்குவத்தின் கதை

ஐந்து மணித்தியாலங்களைக் கடந்தும் இரண்டரைப் பனைமர உயரமுள்ள அந்த ஆலமரத்தின் உச்சியிலிருந்து வடக்கு நோக்கி நெற்றியில் கையை வைத்து ஒளியை மட்டுப்படுத்தி கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்தார் சந்திரலிங்கம். அவரது மனைவி தலையில் பெரிய...