Thursday, September 28, 2023

தஸ்தயெவ்ஸ்கி 200-ஆம் ஆண்டுச் சிறப்பிதழ்

தஸ்தயெவ்ஸ்கியின் 200 வது ஆண்டை கொண்டாடும் வகையில் கனலி வெளியிட்ட தஸ்தயெவ்ஸ்கி 200-ஆம் ஆண்டுச் சிறப்பிதழ்.

இன்னொருவரின் மனைவி -ஃபியதோர் தஸ்தயெவ்ஸ்கி

“கொஞ்சம் தயவு செய்யுங்கள் சார்”…..உங்களிடம் பேச அனுமதியுங்கள்…” அவ்வாறு அழைக்கப்பட்டவன் நகர முயன்றான். மாலை எட்டு மணிக்குத் தெருவில் நின்றுகொண்டு திடீரென்று தன்னை வழிமறித்தவாறு எதையோ பேச எத்தனிக்கும் ரக்கூன் கோட்டு அணிந்த மனிதனைக்...

காதலெனும் தீராக் குருதிச்சுவை-தஸ்தாயெவ்ஸ்கியின் A Gentle spirit நெடுங்கதையை முன்வைத்து-சுரேஷ் பிரதீப்

ஒரு பழைய கதை. நாயொன்று வெகுநாட்களுக்கு முன்பே நீர்வற்றிப்போன ஆற்றின் நடுவே என்றோ இறந்த ஒரு மாட்டின் எலும்பைக் கண்டடைகிறது. ரத்தம் வற்றிப்போன அந்த எலும்பைப் பற்களுக்கு இடையே வைத்துக் கடிக்கிறது. எலும்பின்...

ஃபாக்னர் தாஸ்தாயெவ்ஸ்கியை வாசிக்கிறார் -தாத்தியானா மொரஷோவா

ஃபாக்னர் கவனிக்கத்தக்க அளவில் குறிப்பிட்டார்: “தாஸ்தாயெவ்ஸ்கி என்னிடம் அதிக அளவில் செல்வாக்கு செலுத்தியவர் மட்டுமல்ல, அவரை வாசிப்பதில் அதிக அளவு நான் மகிழ்ச்சியைப் பெற்றவன், இன்னும் ஒவ்வொரு வருடமும் நான் அவரை மீண்டும்...

கலையின் மெய்ம்மையைக் கண்டுணர்ந்த மகத்தான படைப்பாளி :தாஸ்தயேவ்ஸ்கி -உதயசங்கர்

“மனிதன் பரம ரகசியமானவன். விடுகதையைப் போன்றவன். இதற்கான விடையைக் கண்டுபிடிக்க வாழ்நாள் முழுவதும் செலவழித்தாலும் வீணல்ல. இந்த விடுகதையைப் பின்தொடர்ந்து நான் செல்கிறேன். அதற்கு நான் ஒரு மனிதனாக இருக்க விரும்புவதே காரணம்….” (தாஸ்தயேவ்ஸ்கி...

மரேய்* என்னும் குடியானவன்[The Peasant Marey]  ஃபியோதர் தஸ்தயெவ்ஸ்கி

அது ஈஸ்டர் வாரத்தின் இரண்டாம் நாள்; திங்கட்கிழமை. இதமான வெம்மையுடன் கூடிய காற்று, தெளிவான நீல வானம், உச்சி வெயிலின் பளிச்சிடும் ஒளி, இதமளிக்கும் வெப்பம் என்று எல்லாம் இருந்தபோதும் என் ஆன்மா...

படைப்பூக்கம் என்ற காட்டாறும் கதைத்தொழில்நுட்பம் என்ற அணைக்கட்டும் – பி.கே.பாலகிருஷ்ணன்

ஒரு கலைப்படைப்பின் உருவாக்கத்தில் கலைஞனின் பிரக்ஞையை கலை எதிர்கொள்வது வடிவம் சார்ந்த சிக்கல் என்ற நிலையில்தான். கலைஞர்கள் விஷயத்தில் இது மறுக்கமுடியாத உண்மை. கலைஞனின் பணி என்பது வடிவச்சிக்கல் என்ற ஒரே ஒரு...

பாவப்பட்டவர்களின் தேவதூதன் -அ.வெண்ணிலா

‘‘மகிழ்ச்சி! அப்படியொன்றை நான் வாழ்க்கையில் அறிந்ததே இல்லை. நான் விரும்பிய மகிழ்ச்சி எனக்கு ஒருபோதும் கிடைத்ததில்லை...’’ தஸ்தயேவ்ஸ்கி தன் மனைவி அன்னாவிடம் இப்படி வருந்தியிருக்கிறார். துயரங்களின் ஊற்றாக இருந்த வாழ்க்கையில் இருந்துதான் தஸ்தயேவ்ஸ்கி காலத்தால்...

போபோக் (Bobok – ஒரு சிறிய பீன் வகை)- ஃபியோதர் தஸ்தயெவ்ஸ்கி

“நீங்கள் ஏன் எப்போதும் துக்கமாகவே இருக்கிறீர்கள்? தயவுசெய்து சொல்லுங்களேன்.” என சிம்யோன் அர்டல்யொனோவிட்ச் நேற்று முன் தினம் திடீரென என்னிடம் வினவினார், வித்தியாசமான கேள்வி. அப்போது நான் கோவப்படவில்லை, நான் மிகவும் பயந்தவன்;  ஆனால்...

தஸ்தயெவ்ஸ்கியும் டால்ஸ்டாயும் :விலகி நிற்கும் பெருமலைகள்-அஜயன் பாலா

நம்மூர் எழுத்தாளர்கள் ஈகோ சண்டை பற்றி பலர் ஏதோ இது தமிழ் இலக்கியத்துக்கே பிடித்த சாபக்கேடு என  சிலர் அவ்வப்போது புலம்புவதுண்டு, உலகம் முழுக்கவே அப்படித்தான். குறிப்பாகப் புகழ்பெற்ற ருஷ்ய எழுத்தாளர்களான டால்ஸ்டாய்...

சூதாடி -காளிப்ரஸாத்

ஒரு மூன்றாம் மனிதனின் ஆர்வம் என்பது, எந்த ஒரு விஷயத்திலும் தவிர்க்க இயலாமல் உள் நுழைந்து, அதன் விளைவுகளைக் காண்பித்து விடக்கூடியவை. யோசித்துப் பார்த்தால், பாண்டவ கெளரவ குடும்பப் பிரச்சினையில் உள்நுழைந்து சூதாடிய...