படைப்புகள்

கதைகள், கவிதைகள், தொடர்கள் உள்ளிட்ட நேரடி தமிழ் படைப்பாக்கங்கள்

திகம்பர பாதம்

பழையாற்றின் பரிசல்துறையில் ஒரே சலசலப்பு. வந்திறங்கும் சனங்களும் நீராடி முடித்து அதிகாலை பூசைக்குச் சென்று இடம்பிடித்து நின்றுவிட விரைந்த மற்றவர்களும் எழுப்பிய சிவ முழக்கத்தில் ஸ்ரீ இந்திரமே அதிர்ந்தது. இவர்களை அதட்டியும் கழிகளால்...

மக்கள் எதிரி ஷேக்ஸ்பியரின் ஃப்ஸ்ட் ஃபொலியோ

ஷேக்ஸ்பியர் எனும் இங்கிலாந்தின் எழுத்தாளர் உலகளாவிய இலக்கிய கோட்பாடாக மாறி நூற்றுக்கணக்கான வருடங்கள் கடந்துவிட்டன. ரெனைசான்ஸ் காலகட்டத்தின் நாயகனாகத் திகழ்ந்து இங்கிலாந்தின் கலாச்சாரச் சின்னமாக அவன் கொண்டாடப்படுகிறான். பத்தொன்பதாவது நூற்றாண்டின் விக்டோரிய யுகத்தின்...

கம்பாட்டம்

நான் சென்று விளக்கை அணைத்துவிட்டு வீட்டின் ஒரு முக்கில் சுருட்டி நிறுத்திவைக்கப்பட்டிருந்த கரைகள் கிழிந்துவிட்ட கோரைப்பாயை எடுத்துவந்து தரையில் விரித்துப் படுத்துக்கொண்டேன். தாத்தா உறங்கிவிட்டதற்கான அறிகுறியாக அவரது அறையிலிருந்து வந்துகொண்டிருந்த அனக்கம் நின்றுவிட்டது. நான்...

ந.பெரியசாமி கவிதைகள்

பூனை விந்தி நடக்கிறது பூனை தவறுதலாக கால் ஒன்றை குறைச்சலாக்கி வரைந்துவிட்டேன்.   எங்களுக்குள் இயல்பாகியது அது முறைப்பதும் நான் மன்னிப்பு கேட்பதும்.   விரையும் வேறு பூனை பார்க்க அதன் கண்கள் நெருப்பாகிடும் அப்பொழுது கிண்ணத்தில் பாலை நிரப்பி அமைதி காத்திடுவேன்.   இன்று மறக்காமல் வரைபடத் தாள்களையும் எழுது உபகரணங்களையும் எதிர் இல்ல சிறுமிக்கு அன்பளிப்பாக்கினேன் மென்மையை ஏந்திக்கொண்டு பதுங்கிப்...

புறப்பாடு

                          1  உலகப்பற்றற்ற துறவிகளான தர்வேஷ்கள், தனது ஆன்மாவைக் கீழான மனோஇச்சைகளிலிருந்து இறைதுதியுடன் உரல்போல் சுழன்று ஆன்மாவைப் பரிசுத்தப்படுத்தும் சமா எனும் சுழல் நடனத்தை வெளிப்படுத்த சிறுவர்கள் வரிசையாகப் பள்ளி ஆண்டுவிழா நிகழ்வுமேடையில் நின்றுகொண்டிருந்தனர். ...

முழுவதும் நீலம்

முன்னர் அனிமேக்கள் என்றாலே ஓர் ஒவ்வாமை எனக்கிருந்தது. என் புதல்விகள் இருவரும் இருபத்தி நான்கு மணி நேரமும் ரத்தமாய்ச் சொட்டும் அனிமேக்களை அலுக்காமல் பார்த்துக் கொண்டிருப்பார்கள். இத்தனை கொடூரமான அனிமேக்களைப் பார்ப்பதனால்தான் ஜப்பானில்...

(எம்) மாடத்து (டி) தெக்கேப்பாட்டு வாசுதேவன் நாயர் [முழுமையைத் தேடும் முழுமையற்ற புள்ளிகள்.]

(எம்) மாடத்து (டி) தெக்கேப்பாட்டு வாசுதேவன் நாயர் “எனது இலக்கிய வாழ்க்கையில் கூடலூரிடம்தான் நான் மற்றெல்லாவற்றையும் விடக் கடமைப்பட்டிருக்கிறேன். வேலாயுதேட்டன், கோவிந்தன்குட்டி, தாயம் விளையாட்டுக்காரன் கோந்துண்ணி மாமா, காதறுந்த மீனாட்சி அக்கா போன்றவர்களின் ஊரான...

முதற்கனலின் பிதாமகன்

இருபத்தியாறாயிரம் பக்கங்கள் இருபத்தியாறு தொடர் நாவல்கள் என ஏழு வருடங்கள் தொடர்ந்து எழுதி மகாபாரதத்தின் மறு ஆக்கமான "வெண்முரசு" எனும் நவீன காவியத்தைப் படைத்து தமிழ் இலக்கியத்திற்கு எழுத்தாளர் ஜெயமோகன் அவர்கள் பெருமை...

கத்துங் குயிலோசை

அந்தக் குயிலின் குரல்வளையைத் தன் கைகளால் நெறிப்பதைப் போலத் தனக்கு வந்த அந்தக் கனவின் பயங்கரம் தாளாது அவன் விழித்துக் கொண்டபோது நள்ளிரவு மணி இரண்டு. அவன் வீட்டுப் பின்புறத் தோட்டத்திலிருந்த மாமரத்திலிருந்து...

இடாகினி கதாய அரதம்

முருகபூபதியின் நாடகங்களை எப்போதும் நான் தவறவிடுவதில்லை. பெங்களூரில் எங்கு நடப்பினும் சென்று பார்க்கத்தவறுவதில்லை.  அதையே இந்த இடாகினியின் முடிவில் நிகழ்த்துக் கலைஞர்கள் மூட்டை முடிச்சினைக் கட்டிக் கொண்டு இருக்கும்போது  அவருடன் பேசிக்கொண்டிருக்கையில் கூறினேன். இந்த...