மொழிபெயர்ப்புகள்

வேற்று மொழிகளிலிருந்து மொழிபெயர்க்கப்பட்ட படைப்புகள்

எங்கே போகிறாய், எங்கே போயிருந்தாய்?

அவள் பெயர் கோன்னி. வயது பதினைந்து. கூச்சத்துடன் கொக்கரித்தபடியே சட்டெனக் கழுத்தைத் திருப்பிக் கண்ணாடியில் பார்த்துக்கொண்டோ, மற்றவர்களின் முகத்தைப் பார்த்தோ தன்னுடையதைச் சரிபார்த்துக் கொள்வாள். எல்லாவற்றையும் கவனித்த, எல்லாவற்றைப் பற்றியும் தெரிந்து வைத்திருந்த,...

திரை (இந்தி) – இஸ்மத் சுக்தாய் ,தமிழில்- அனுராதா கிருஷ்ணா சாமி

வெள்ளை நிற படுக்கை விரிப்பு விரித்திருந்த அந்த கட்டிலில், நாரைகளை விடவும் அதிகமான வெள்ளை முடிகள் கொண்டவள் போலவும், அசிங்கமான ஒரு பளிங்கு மூட்டையைப் போலவும் பாட்டி கிடந்தாள். மையிட்ட தடம் மட்டும்...

WILD GREEN

"The sales and technical team which trains our clients in product usage of the products and our biggest client 'Be way hospitality' at quanty,...

சுற்றுச்சூழல் பாதுகாப்பில் இந்தியா தன்னுடைய தலைமைப் பொறுப்பை எப்படி இழந்தது? ஸ்ரீதர் ராதாகிருஷ்ணன்,தமிழில் –...

1970களிலும் 80களிலும் உலகளவில் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் தலைமைப் பொறுப்பிலிருந்த இந்தியா இப்போது மோசமான ஒரு முன்னுதாரணமிக்க நாடாக மாறிவிட்டது. இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் கொண்டாடப்படும் இவ்வேளையில் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் இந்தியா...

க்ரிட்டோ (அல்லது, நன்னடத்தைப் பற்றி) ப்ளேடோ

சாக்ரடீஸ்: என்ன க்ரிட்டோ இவ்வளவு சீக்கிரம் வந்துள்ளீர்? இது அதிகாலை இல்லையா? க்ரிட்டோ : ஆமாம், சாக்ரடீஸ். சாக்ரடீஸ்: மணி என்ன இருக்கும்? க்ரிட்டோ: இது விடியற்காலை.  சாக்ரடீஸ்: காவல்காரர் நீங்கள் சொல்வதைக் கேட்டு உங்களை உள்ளே அனுமதித்தது...

ஹிரென் பட்டாச்சார்யா கவிதைகள்

  1. நன்கறீவீர் நீங்கள் இந்தப் பாவலனிடம் ஒன்றுமில்லை ஓர் ஒற்றை ஆடையைத் தவிர அதுவும்கூட இருதுணிகளால் ஒட்டுப்போட்டத் தையல்தடத்துடன் காதலும் அப்படியே!   2. என்னுள் எரியும் எது உள்ளத்தின் பெருந்துயரையும், பேரின்பத்தையும் அது உண்டாக்குகிறது ?   உன் காதல் இசைக்குறிப்பைத் தாளமிடுகிறது என் அனைத்துப் புலன்களும்   சாம்பல் முடிவுற்று உள்ளத்தின் அகம்புறமும்...

கடவுளைப் போல யார்?

எழுதியவர்: அக்வைக்கே எமெஸி தமிழில்: லதா அருணாச்சலம் அம்மா எப்போதும் கடவுளைப் பற்றி பேசிக்கொண்டே இருப்பார், ஏதோ, அவர்கள் இருவரும் மிக நெருங்கிய நண்பர்கள் போல,  ஏதோ அவர் அம்மாவின் குரலைக் கடன் வாங்கிக் கொண்டவர்...

கடைசி புகைப்பிடிப்பாளன்

விமானப்படை உலங்கூர்திகளின் கண்ணீர்ப் புகை தாக்குதலில் இருந்து தற்காத்துக்கொண்டபடி, நான் பாராளுமன்ற கட்டிடத்தின் உச்சியில் அமர்ந்திருக்கிறேன். உலங்கூர்திகள் எனக்கு மேலே ஈக்களைப் போல வட்டமடித்துக் கொண்டிருக்கின்றன. எனது இறுதி எதிர்ப்பைக் காட்டும்விதமாக, எனது...

வென் தீவில்..

“எலனர், இதைக் கவனி! ‘கதிரவன் அஸ்தமித்துவிட்ட அந்த மாலையில் வழக்கம்போல நான் வானத்து நட்சத்திரங்களைக் கவனித்து சிந்தித்துக் கொண்டிருந்த போது ஒரு புதிய நட்சத்திரம், மற்ற எல்லா நட்சத்திரங்களையும் விட பிரகாசமாக என்...

குறும்புனைவு: ‘தெரெசா’ எனக் கூவிய மனிதன்

எழுதியவர்:– இடாலோ கால்வினோ  தமிழில்: பிரவீண் பஃறுளி நான் நடைபாதையிலிருந்து  கீழிறங்கினேன். சில அடிகள் திரும்பி நடந்தேன். வீதியின் நடுவே  நின்று மேலே பார்த்தபடி, கைகளை உதடுகளிடம் குவித்து ஒலிபெருக்கி போல செய்தேன்....