படைப்புகள்

கதைகள், கவிதைகள், தொடர்கள் உள்ளிட்ட நேரடி தமிழ் படைப்பாக்கங்கள்

அவரவர் நியாயம்

வெளியே காவல் நிலையத்தின் வாசலில் மூன்று சிறு குழுக்கள் நின்றிருந்தன. இப்படி யாராவது காவல் நிலையத்திற்கு வெளியே நின்றுகொண்டிருந்தால், உள்ளே ஏதோ ஒரு பஞ்சாயத்து நடந்துகொண்டிருக்கிறது என்று அர்த்தம். மூன்று குழுக்களில் இரண்டு குழுக்கள்...

தாரா சங்கர் பானர்ஜியின் ‘ஆரோக்கிய நிகேதனம்’ [கண்ணீரைப் பின்தொடர்தல்]

நாவல் காலம் மாறுவதைப்பற்றி பேசும் ஒரு இலக்கிய வடிவம்’ மிக பொத்தாம்பொதுவான ஒரு கூற்று. ஆனால் வியப்பூட்டுமளவுக்கு சரியானதும்கூட. உலக இலக்கியத்தின் மகத்தான ஆக்கங்கள் பலவும் காலமாறுதலை விரிவாகச் சொல்வதையே கருவாகக் கொண்டுள்ளன....

தாஸ்தயேவ்ஸ்கி என்ற கலைஞன் -சுந்தர ராமசாமி

தாஸ்தயேவ்ஸ்கியின் படைப்புலகம் நம் மனதில் உருவாக்கும் பிம்பம் என்ன? ஒரு இருட்குகை. முடிவற்றது. கிளைகள் பிரிந்து அக்கிளைகளிலிருந்து மேலும் கிளைகள் பிரிந்து செல்வது. அந்த இருட்குகைக்குள் மலைச் சிகரங்கள். பள்ளத்தாக்குகள். பாலைவனங்கள். வனாந்தரம்....

(எம்) மாடத்து (டி) தெக்கேப்பாட்டு வாசுதேவன் நாயர் [முழுமையைத் தேடும் முழுமையற்ற புள்ளிகள்.]

(எம்) மாடத்து (டி) தெக்கேப்பாட்டு வாசுதேவன் நாயர் “எனது இலக்கிய வாழ்க்கையில் கூடலூரிடம்தான் நான் மற்றெல்லாவற்றையும் விடக் கடமைப்பட்டிருக்கிறேன். வேலாயுதேட்டன், கோவிந்தன்குட்டி, தாயம் விளையாட்டுக்காரன் கோந்துண்ணி மாமா, காதறுந்த மீனாட்சி அக்கா போன்றவர்களின் ஊரான...

ஆயில்யத்துக்கும் பூசத்துக்கும் இடையேயான மானுடன்

உறக்கம் அடர்நீலமாகச் சுருண்டு நீர்ச்சுழி போல் உள்வாங்கிக் கொண்டிருந்தபோது அலைபேசி ஒலித்தது. விழித்திருக்கும் வேளைகளில் மனதுக்கு வெறுப்பில்லாத மணியோசை, இரவில் திடுக்கிட இருந்தது. கோவைக்கு மாற்றலாகி வந்து, பிரயத்தனப்பட்டு தொலைப்பேசித் தொடர்பு வாங்கிய...

குர் அதுல் ஐன் ஹைதரின் “அக்னி நதி” (கண்ணீரைப் பின் தொடர்தல்)

பதினைந்து வருடம் முன்பு காசிக்குச் சென்றிருந்தேன். மணிகர்ணிகா கட்டத்தில் கங்கையின் கலங்கல் நீரில் கால் நனைத்து நின்றபோது ஒருவகையான ஊமைவலி நெஞ்சில் ஏற்பட்டது. கரையில் பாழடைந்த புராதனக் கட்டிடங்கள். கரிய திராவகத்தை உமிழும்...

கங்காணி ப. சுடலைமணி

1. தென்மலை ரயில் நிலையத்தில் நின்ற ரயிலிலிருந்து அவசரகதியில் மிகவும் பரபரப்புடன் மாரியப்பன், தன் மூத்த அக்கா மகன் ராஜவேலுவுடன் இறங்கினான். அவனது ஒரு கையில் துணிகள் அடங்கிய பெரிய ரெக்சின் பேக் இருந்தது....

ஊறா வறுமுலை

குதிரை கனைக்கும் அரவம் மிக அருகில் கேட்டது. பேச்சி உள்ளுக்குள் பதறி எழுந்தாள். எதிரில் எண்ணெய்யில் மினுங்கிய குதிரை நின்று கொண்டிருந்தது. ஆராட்டப்பட்ட மஞ்சள் நீர்த்துளிகள் இன்னும் அதன் மீது உலர்ந்திருக்கவில்லை. சந்தனமும்,...

இருண்ட காட்டில் ஏற்றிய சுடர் :கரமசோவ் சகோதரர்கள் -சு.வேணுகோபால்

தஸ்தாவேஸ்கி ஒரு படைப்பாளியாக படுமோசமான கதாமாந்தர்களையும் நேசித்தவர். யாருக்காகவும் எந்தப் புனிதருக்காகவும் ஒரு படைப்பாளியாக எந்த சலுகையும் காட்டாதவர். காலத்தின் கருத்தோட்டங்களையும் சமூக மாந்தர்களின் அடையாளங்களையும் தனது கதையுலகத்திற்குள் கலந்தவர். மையக் கதையில்...

ஜீவன் பென்னி கவிதைகள்.

கடைசிப் பெட்டியின் வாசலில் உலகைச் சாய்த்து வைத்திருப்பவன். ஒவ்வொரு இடப்பெயர்தலிலும் அதற்கு முன்பான வாழ்வை அங்கேயே விட்டு விட்டு வருகின்றவன், எல்லோராலும் தான் நேசிக்கப்படுவதன் காரணங்களில் சிறிய ஒன்றையே எப்போதும் தேடிக்கொண்டிருக்கிறான்.!   1. ஒரு குற்றத்தின் முன்பாக வெகுநேரம் அமர்ந்திருப்பவன் தன் கைகளின்...