படைப்புகள்

கதைகள், கவிதைகள், தொடர்கள் உள்ளிட்ட நேரடி தமிழ் படைப்பாக்கங்கள்

தினகரன் கவிதைகள்

சற்று முன்பே பார்த்துவிட்டேன்   உடம்பு முடியாமல் கிடக்கிற அவனுடைய வீட்டிற்குப் போகிற வழியில் உதிர்ந்து என் மீது விழுந்தது பழுத்து, பச்சைக் காணாது போய் நடுநரம்பில் கடமைக்கென ஒட்டி இணைந்திருக்கும் கிளை நரம்புகளைக் கொண்டதொரு இலை. அதை உதறிவிட்டு நடந்து நடந்து இந்தக் கதவைத் தட்டினேன் இருமியபடி சட்டை அணியாமல் கதவைத் திறந்த அவனை சற்று முன்புதான் எங்கோ உதறிவிட்டது போல இருந்தது    கருணையில்லாத...

கவிதை: அன்று முதல் இன்று வரை

ஜெ. பிரான்சிஸ் கிருபா பிரான்சிஸ் கிருபாவின் கவிதைகளில் அபாரமான கற்பனையும், புனைவும் மண்டிக் கிடக்கின்றன. பல இடங்களில் யதார்த்தமும் புனைவும் பிணைந்து திடீர் திடீரென்று படிமங்களாக வெளிப்படுகின்றன. இவரது கவிதைகளில் காதல்வயப்பட்ட கவியின் மனம்...

சதி

எமி அலுவலக அறையில் தனது இருக்கையில் அமர்ந்த இடத்தில் இருந்தே ஜாக்கின் அம்மாவைப் பார்க்க முடிந்தது.  பள்ளி விட்டு அதன் கோலாகலம் முடிவதற்கு முன்பே ஜாக் வகுப்பறையில் இருந்து வெளியேறி கால்களைத் தேய்த்துக் கொண்டு...

ஊறா வறுமுலை

குதிரை கனைக்கும் அரவம் மிக அருகில் கேட்டது. பேச்சி உள்ளுக்குள் பதறி எழுந்தாள். எதிரில் எண்ணெய்யில் மினுங்கிய குதிரை நின்று கொண்டிருந்தது. ஆராட்டப்பட்ட மஞ்சள் நீர்த்துளிகள் இன்னும் அதன் மீது உலர்ந்திருக்கவில்லை. சந்தனமும்,...

இருண்ட காட்டில் ஏற்றிய சுடர் :கரமசோவ் சகோதரர்கள் -சு.வேணுகோபால்

தஸ்தாவேஸ்கி ஒரு படைப்பாளியாக படுமோசமான கதாமாந்தர்களையும் நேசித்தவர். யாருக்காகவும் எந்தப் புனிதருக்காகவும் ஒரு படைப்பாளியாக எந்த சலுகையும் காட்டாதவர். காலத்தின் கருத்தோட்டங்களையும் சமூக மாந்தர்களின் அடையாளங்களையும் தனது கதையுலகத்திற்குள் கலந்தவர். மையக் கதையில்...

ஜீவன் பென்னி கவிதைகள்.

கடைசிப் பெட்டியின் வாசலில் உலகைச் சாய்த்து வைத்திருப்பவன். ஒவ்வொரு இடப்பெயர்தலிலும் அதற்கு முன்பான வாழ்வை அங்கேயே விட்டு விட்டு வருகின்றவன், எல்லோராலும் தான் நேசிக்கப்படுவதன் காரணங்களில் சிறிய ஒன்றையே எப்போதும் தேடிக்கொண்டிருக்கிறான்.!   1. ஒரு குற்றத்தின் முன்பாக வெகுநேரம் அமர்ந்திருப்பவன் தன் கைகளின்...

தினகரன் கவிதைகள்

1. பரபரப்பு மிகுந்த இந்த வாழ்வில் ஏதோவொரு சாலையின் ஓரத்தில் காத்திருக்கிறான் கல்யாணசுந்தரம் சிக்னலின்/ வாழ்வின் பச்சை விளக்கிற்காக. அது விழுவதாயில்லை மாறாக, சட்டைப் பாக்கெட்டிற்கு சற்று மேலே விழுகிறது ஒரு பறவையின் எச்சம் எப்படியோ, பறவைக்குத் தெரிந்திருக்கிறது விரிசலடைந்த இடங்களை! 2. தற்கொலைக்குத் துணிந்தவனின் ஒரு சாயங்காலப் பொழுது: வெகுநேரமாக் கவிழ்ந்து படுத்தபடியே இருக்கிறேன் உடலுக்குள் ஊடுருவும் ஒளியை சத்தமில்லாமல் அறைக்குள் அனுமதிக்கிறது சன்னல்   எழுந்து அருகில் சென்றதும் எங்கிருந்தோ வந்த...

தூய வெண்மையின் பொருளின்மை

இலைகளற்றக் கிளைகளில் விளையாட யாருமற்ற கிரணங்கள், நிறங்களைத் துறந்து தியானித்து உக்கிர வெண்மையை ஓலமிடுகின்றன நிறங்களின் வெறுமையில் நிறையும் வெண்மையில் திசையெங்கும் பிரதிபலித்து மீண்டு வந்து சேரும் மேலும் சிறிதளவு வெண்மை. தனிமையின் விடமேறி நீலம்பாரித்து நிற்கும் வானம் மேகங்கள் அற்று மேலும் வெறுமை கூட நீலம் அடர்கிறது.. பனி பூத்து பனி கொழிக்கும் வனமெங்கும் தானே எதிரொளித்து சோம்பிக் கிடக்கும் தூய வெண்மையின் பொருளின்மையில், எப்படியாவது ஒரு...

நிலாகண்ணன் கவிதைகள்

அவளொரு வயலினிஸ்ட் பெண்மையின் பொருள்படும் நிழலும் அன்பு திரண்ட கனியுமாக தன்னை மூடிக்கொள்ளாத அம்மரம் எப்போதும் திறந்திருந்தது கன்னி மரியாவைப் போல அவளுடைய கண்களின் ஆழத்தில் எப்போதும் இரக்கத்தின் சொல் இருக்கும் அவள் ஒரு வயலினிஸ்ட் கிழிந்த ஆடைகளை சிறு...

ந.பெரியசாமி கவிதைகள்

பூனை விந்தி நடக்கிறது பூனை தவறுதலாக கால் ஒன்றை குறைச்சலாக்கி வரைந்துவிட்டேன்.   எங்களுக்குள் இயல்பாகியது அது முறைப்பதும் நான் மன்னிப்பு கேட்பதும்.   விரையும் வேறு பூனை பார்க்க அதன் கண்கள் நெருப்பாகிடும் அப்பொழுது கிண்ணத்தில் பாலை நிரப்பி அமைதி காத்திடுவேன்.   இன்று மறக்காமல் வரைபடத் தாள்களையும் எழுது உபகரணங்களையும் எதிர் இல்ல சிறுமிக்கு அன்பளிப்பாக்கினேன் மென்மையை ஏந்திக்கொண்டு பதுங்கிப்...