பேதமுற்ற போதினிலே -10
பிடித்தல், பீடித்தல்
அடிப்படையில் நான் ஒரு கவிஞன் என்றாலும் முகநூல் ஊடகம் என்னை ஒரு பத்தியாளனாகவும் அடையாளம் காட்ட உதவியிருக்கிறது. வழவழா கொழகொழாவென்று எழுதுவது எனக்கு பிடிக்காததும் பத்தியெழுத்தை நான் தேர்வுசெய்ததற்கு ஒரு காரணம்....
மண்ட்டோ படைப்புகள்
சமூக, கலாச்சார மனதின் துயரங்களிலிருந்து மனிதத்துவ வாசல்களைத் திறந்து காண்பிக்கும் எழுத்துக்கள்
மனித கண்ணியத்திற்கான விழுமியங்களைத் தொடர் தேடல்களில் கண்டடைவதே கலை இலக்கியச் செயல்பாடுகளின் மிக முக்கியமான அம்சமாகவும், உள்ளார்ந்த...
மெட்ராஸின் சிவப்பு நிற பேரழகு கட்டிடங்கள்- 5
ஜார்ஜ் கோட்டையும் கறுப்பர் நகரமும்
மேற்கிலிருந்து வந்து நம் உழைப்பை, நம் மண்ணின் செல்வத்தை சுரண்டிச் சென்றவர்கள் பலர். அவர்களை வெள்ளையர் என்று பொத்தாம்பொதுவாக சொல்கிற பழக்கம் நமக்குண்டு. வரலாறு என்பது பொத்தாம் பொதுவான...
டெனிஸ்
சின்ட் மார்ட்டின் தீவிற்கு நான் வந்து இரண்டு வருடங்கள் இருக்கும். என்னுடைய ஃபிரெஞ்ச் உச்சரிப்பை ஓரக்கண்ணால் பார்த்து டெனிஸ் சிரிப்பதும், நான் அவள் தலையில் தட்டி முறைத்துச் செல்வதும், அவளது ஆங்கில உச்சரிப்பைக்...
டைம் இஸ் எ பியூட்டிபுள் கேர்ள்
1.
உழவரே! உழவரே!
விதைத்த மறுநாளே அறுவடைக்குத் தயராகும்
தானியம் போல பற்களை மாற்றி இருக்கிறேன்
உங்களின் ஏர்க்குச்சியால் அவற்றை விழ வைக்க முயன்றால்
முளைக்காத பற்களும் விழுந்துவிடும் ~ என்றாள்
உழவர், அவளைப் பார்த்தவாரே "ச்சோ! ச்சோ" என
காற்றில்...
கார்ல் ஜூங்கும் லிபிடோ ஆய்வும்
உளவியல் வரலாறுகள் எல்லாம் கிறிஸ்து பிறப்பிற்கு முன்பு வரை கிரேக்க மற்றும் இலத்தீனிய தத்துவ ஞானிகளின் யூகங்களின் அடிப்படையில் தான் சொல்லப்பட்டது. மனித மூளையைப் பற்றி முதன் முதலில் ஆராய்ச்சி செய்தவர் அரிஸ்டாட்டில்....
தூரிகை
இந்த பட்டாம்பூச்சி வாழ்வை
எவ்வாறு ரசிக்கின்றது
காற்றில் மிதந்து கொண்டிருக்கும்
தும்பிகள் பட்டாம்பூச்சிக்கு வழிவிடுகின்றன
வானிலிருந்த விழுந்த மழைத்துளி
சிலையாகிவிட்ட பட்டாம்பூச்சியின்
தவத்தினை கலைத்துவிட்டது
பசிய காட்டில்
திரியும் பட்டாம்பூச்சிகள்
மனிதர்களையே பார்த்திருக்காது
பச்சை போர்த்திய இவ்வுலகம்
பட்டாம்பூச்சிகளுக்கானது
கடவுள் தனது
தூரிகை வண்ணங்களால்
பட்டாம்பூச்சியை அழகுறச் செய்கிறார்
மனிதன் சுதந்திரத்தின்
ஆனந்தத்தை அனுபவிக்க
பட்டாம்பூச்சியாகத்தான்
பிறவியெடுக்க வேண்டும்!
ப.மதியழகன்
ட்ரான்ஸ் – ஒரு விமர்சனப் பார்வை
உலகின் மிகவும் கனம் மிகுந்தது ஒரு சிறு குழந்தையின் சவப்பெட்டி. அந்தச் சவப்பெட்டியில் வைத்து அடக்கம் செய்யும் அந்த இறுதி நொடியில் தன்னுடைய குழந்தையின் சவத்தைத் தூக்கிக் கொண்டு ஒரு போதகரின் முன்பாகக்...
முதல் கதை எது? புனைவிலக்கிய வெளியில் ..
முதல் கதை எதுவென ? குறித்தான கேள்வியோடுதான் உருவாக்கம் பெற்றது இக்கட்டுரை. நவீனத் தமிழ் இலக்கிய வெளியில் புனைவிலக்கியம் குறித்தான படைப்புக் கலை அதாவது தமிழ்ப் புனைவிலக்கியம் பொறுத்த வரை பிரதாப முதலியார் சரித்திரத்திலிருந்து தொடங்கினால் (1879-2020) நூற்று நாற்பத்தொன்று ஆண்டுகளைக் கடந்த நிலையில், இலக்கிய ஆய்வாளர்களால் எது...
அடித்தட்டு மக்களின் குணாம்சங்களைக் கொண்டாடும் வேரில் பழுத்த பலா!
பலா தித்திப்பான இனிப்புச் சுவையைக் கொடுப்பது போல எழுத்தாளர் சு.சமுத்திரம் அவர்கள் எழுதிய ‘வேரில் பழுத்த பலா’ நாவலிலும் அத்தகையதொரு இனிமையான சுவையைக் கண்டேன்... உணர்ந்தேன்...
நாவலின் பெயர் பொருத்தம் மிகச் சிறப்பாக அமைந்திருக்கிறது....















