படைப்புகள்

கதைகள், கவிதைகள், தொடர்கள் உள்ளிட்ட நேரடி தமிழ் படைப்பாக்கங்கள்

வெண்மார்பு மீன் கொத்தி

இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் பல வகை மீன் கொத்திகளிருப்பினும் பரவலாக காணக் கூடியது வெண்மார்பு மீன்கொத்தி ஒன்றே ஆகும். இதனை  வெள்ளைத் தொண்டை மீன் கொத்தி, வெள்ளை மார்பக மீன் கொத்தி, மர மீன்...

பாற்கடல்

மஞ்சுளா உண்டாகியிருந்தது பார்க்கவே மகா அம்சமாய் இருந்தது. பெண்களே கனவுப் பிறவிகள் தானே, என்று புன்னகையுடன் நினைத்துக் கொண்டான் சபாபதி. ஆசைப்பட்ட பிடித்த விஷயம் ஒன்று நடந்து விட்டால் அவர்கள் முகம் மருதாணியிட்டாப்...

நிலாகண்ணன் கவிதைகள்

அவளொரு வயலினிஸ்ட் பெண்மையின் பொருள்படும் நிழலும் அன்பு திரண்ட கனியுமாக தன்னை மூடிக்கொள்ளாத அம்மரம் எப்போதும் திறந்திருந்தது கன்னி மரியாவைப் போல அவளுடைய கண்களின் ஆழத்தில் எப்போதும் இரக்கத்தின் சொல் இருக்கும் அவள் ஒரு வயலினிஸ்ட் கிழிந்த ஆடைகளை சிறு...

தூய வெண்மையின் பொருளின்மை

இலைகளற்றக் கிளைகளில் விளையாட யாருமற்ற கிரணங்கள், நிறங்களைத் துறந்து தியானித்து உக்கிர வெண்மையை ஓலமிடுகின்றன நிறங்களின் வெறுமையில் நிறையும் வெண்மையில் திசையெங்கும் பிரதிபலித்து மீண்டு வந்து சேரும் மேலும் சிறிதளவு வெண்மை. தனிமையின் விடமேறி நீலம்பாரித்து நிற்கும் வானம் மேகங்கள் அற்று மேலும் வெறுமை கூட நீலம் அடர்கிறது.. பனி பூத்து பனி கொழிக்கும் வனமெங்கும் தானே எதிரொளித்து சோம்பிக் கிடக்கும் தூய வெண்மையின் பொருளின்மையில், எப்படியாவது ஒரு...

முகம் புதை கதுப்பினள்

”முதல் தலைகோதல் நினைவிருக்கா?” தலைவிரிகோலமாக ஆய்வுமேடையில் படுத்துக்கொண்டு மருத்துவர்களுக்கு காத்திருக்கும் வேளையிலா இப்படி ஒரு கேள்வி? கழிவது நிமிடங்களா மணிகளா நாட்களா என்று அறியாதபடி தனியாகப் படுத்து விட்டத்தை வெறித்துக் கொண்டிருந்தால் சிந்தனைகள் பல்வேறு திசைகளிலும்...

தினகரன் கவிதைகள்

1. பரபரப்பு மிகுந்த இந்த வாழ்வில் ஏதோவொரு சாலையின் ஓரத்தில் காத்திருக்கிறான் கல்யாணசுந்தரம் சிக்னலின்/ வாழ்வின் பச்சை விளக்கிற்காக. அது விழுவதாயில்லை மாறாக, சட்டைப் பாக்கெட்டிற்கு சற்று மேலே விழுகிறது ஒரு பறவையின் எச்சம் எப்படியோ, பறவைக்குத் தெரிந்திருக்கிறது விரிசலடைந்த இடங்களை! 2. தற்கொலைக்குத் துணிந்தவனின் ஒரு சாயங்காலப் பொழுது: வெகுநேரமாக் கவிழ்ந்து படுத்தபடியே இருக்கிறேன் உடலுக்குள் ஊடுருவும் ஒளியை சத்தமில்லாமல் அறைக்குள் அனுமதிக்கிறது சன்னல்   எழுந்து அருகில் சென்றதும் எங்கிருந்தோ வந்த...

ஆயில்யத்துக்கும் பூசத்துக்கும் இடையேயான மானுடன்

உறக்கம் அடர்நீலமாகச் சுருண்டு நீர்ச்சுழி போல் உள்வாங்கிக் கொண்டிருந்தபோது அலைபேசி ஒலித்தது. விழித்திருக்கும் வேளைகளில் மனதுக்கு வெறுப்பில்லாத மணியோசை, இரவில் திடுக்கிட இருந்தது. கோவைக்கு மாற்றலாகி வந்து, பிரயத்தனப்பட்டு தொலைப்பேசித் தொடர்பு வாங்கிய...

நகுலனின் வாக்குமூலம்

ஒரு நூற்றாண்டு கால நவீனத் தமிழ் இலக்கியத் தடத்தில் நகுலனின் வருகை வித்தியாசமானது. இவருக்கு முன்னோடி என்று மௌனியைக் கொஞ்சம் சொல்லாம் என்றாலும் மௌனி மன உலகின் புனைவுப் பாதையைத் தெளிவான சித்திரத்திற்குள்...

பிஜாய்ஸ் பிராந்தி

நகுலனின் சுருதி கவிதைத் தொகுதியைத்தான் முதன்முதலில் வாசிக்கத் தொடங்கினேன். சுருதி முகப்பு அட்டையில் உள்ள முகத்தின்மீது அமரத் துடிக்கும் அல்லது விடுபட விரும்பும் ஒரு கண்ணாடியின் தத்தளிப்புதான் எனக்குப் பிடித்தமானதாக இருந்தது....

நகுலன் கவிதைகள்

காத்த பானை காத்த பானை கொதிக்காது கரும்பு கசக்காது வேம்பு இனிக்காது என்றாலும் என்ன செய்தாலும் என் மனமே வந்தபின் போக முடியாது போனபின் வர முடியாது என்றாலும் என்ன செய்தாலும் என்றென்றே சொல்லிச் சலிக்கும் என் மனமே ஊமையே உன்மத்த கூத்தனே வாழ ஒரு வழி சாக ஒரு மார்க்கம் சொல்லவல்ல...