படைப்புகள்

கதைகள், கவிதைகள், தொடர்கள் உள்ளிட்ட நேரடி தமிழ் படைப்பாக்கங்கள்

காமம் காமம் என்ப காமம்.

1. ‘‘ஐயோ… என் காலு போச்சு…” என் கதறல் கேட்டு சாந்தி ஓடி வந்தாள். காலை கீழே ஊன்ற முடியாமல் வலியால் தத்தளித்துக் கொண்டிருந்தேன் நான். கணுக்காலில் பலமான வெட்டு விழுந்திருந்தது. என்னை அப்படியே கைத்தாங்கலாகத்...

வாழ்வெனும்  பெருந்துயர்

அவளின்  அவிழ்ந்து  கிடந்த  கூந்தல்  இருளின்  கருமையைப்  பூசிக்  கொண்டிருந்தது. அது  இடைக்குக்  கீழாகத் தாழ்ந்து  தரையில் பரவியிருந்தது. மலையிலிருந்து  வழியும்  அருவியெனத் தலையிலிருந்து  நீண்டு  தொங்கிய  கூந்தலை  அள்ளி  முடியத்  திராணியின்றி...

டிஜிரிடூ

கிட்டத்தட்ட ஆறேழு மாதங்கள் இருக்கும். கிழவனின் அந்த சொர சொர காப்புக் காய்ச்சிப்போன விரல்கள் என்மீது பட்டு. நான் இந்த இடிந்த சுவற்றில் எப்போதோ அறைந்த ஆணியின் மீது தொங்கவிடப்பட்டு. கிழவனுக்கு சிறிது...

பின்-நவீனத்துவ விமர்சனங்களின் போதாமை

- டான் குயிக்ஸாட்டை முன்வைத்து -  செர்வான்டிஸின் 'டான் குயிக்ஸாட்' ஒவ்வொரு காலகட்டத்திலும் தொடர்ந்து வாசிக்கப்பட்டுக் கொண்டேயிருக்கிறது. நீட்ஷேவின் குயிக்ஸாட் வேறு, தஸ்தாயெவ்ஸ்கியின் குயிக்ஸாட் வேறு, காஃப்காவின் குயிக்ஸாட் வேறு.. அடோர்னோவின் நவீனத்துவ வாசிப்பில்...

எப்போதும் சிரித்துக்கொண்டேயிருந்த பெண்

ஒரு பெண் அவளுடைய பிறப்பில் ஏதோ கோளாறு என்று ஊரார் நினைக்கும்படி எதைப் பார்த்தலும் சிரித்துக்கொண்டேயிருந்தாள். யாரைப் பார்த்தாலும், எதைப் பேசினாலும் (பேசாமல் சும்மா எதிரில் நின்றுகொண்டிருந்தாலும்), எந்தச் செய்தியைக் கேட்டாலும் சிரித்துக்கொண்டிருந்தாள்....

ஜெல்லி

தற்போது இஸ்ரேலில் வசிக்கிறோம். எங்கள் வீட்டு சன்னலுக்கு வெளியே மத்தியத்தரைக் கடலும், ஹைஃபா துறைமுகமும் தெரியும். ஒரு தீவில் இருக்கும் மலையின் மீதிருந்து வெளியே பார்த்தால் கடலும், கரையும் தெரியுமே அதுபோல. அவ்வப்போது கடற்கரைக்குப் போவதுதான்...

மஜ்னூன்

மஜ்னூன் இறந்து சொர்க்கத்தை வந்தடைந்தான். மேலோகத்திற்கு வந்தும் துயரிலேயே இருந்தான். கண்ணெதிரில் நின்று கொண்டிருந்த கடவுளைக் கூட அவன் சட்டை செய்யவில்லை. அவரும் எதோ குற்ற உணர்வில் அவன் முகத்தை பார்த்துப் பேசத்...

அந்தம்

பிரபஞ்சத்தில் எங்கோ ஒரு கோடியில். "என் கேள்விக்கு பதில் வேண்டும்" என ஒரு குரல் ஒலித்தது, பத்தாயிரம் தூண்கள் தாங்கி நிற்கும் மஹா மண்டபம் அதிர்ந்தது. நட்சத்திரங்கள் பிரதிபலிக்கும் ஒளிர்ந்த தரையில் உறுதியுடனும் கால்கள்...

நூறு சுவர்கள் ஆயிரம் ஓவியங்கள் – 7

7.கலவியின் செம்பாகம் புலவி.  தம்பதிகளின் உடன்படிக்கை உலகப் போர்களுக்கு இடையே நிகழும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை விட சிடுக்குகள் கொண்டவை. ஆண் பெண் இருவரது இடமும் வெவ்வேறு, என்று தொடர்ந்து சமூகத்தின் எடை நசுக்கித் தெரிவித்துக்...

மெட்ராஸின் சிவப்பு நிற பேரழகு கட்டிடங்கள்- 6

ரிப்பன் மாளிகை   செந்நிற கட்டிடங்களைப் பற்றி பேசத்தான் துவங்கினோம். ஆனால் அந்த கட்டிடங்களின் மூல ஊற்றான அரை வெள்ளை நிற ஜார்ஜ் கோட்டையைப் பேச வேண்டிய அவசியம் பற்றி நான் என்ன சொல்வது உங்களுக்கே...