படைப்புகள்

கதைகள், கவிதைகள், தொடர்கள் உள்ளிட்ட நேரடி தமிழ் படைப்பாக்கங்கள்

ஜானகிராமன் பற்றி கரிச்சான்குஞ்சு

வைதீக ஆசாரமும், பழைய சம்பிரதாயங்களும் நிறைந்த, ஓரளவுக்கு அந்த வழியில் வாழ்வதாகக் காட்டிக்கொள்ள வேண்டிய குடும்பத்தில் பிறந்தவன் அவன். நானும். மன்னார்குடியில் இருந்த மஹோமஹோபாத்தியாயர் யக்ஞஸ்வாமி சாஸ்திரிகளிடம் சாஸ்திரம் வாசித்த சீடர்களில் மூவர்,...

”எனது எழுத்தின் திசையை தீர்மானித்தவன் தி.ஜானகிராமன்.“

   தி.ஜானகிராமனுக்கு இது நூற்றாண்டு.  இவ்வளவு காலங்கள் சென்ற பிறகும் அவர் நினைவு கூறத்தக்கவராயிருக்கிறார். இந்த நூற்றாண்டு மட்டுமல்ல இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் வந்தாலும் அவர் நினைக்கப்படுபவர்தான். நூற்றாண்டு கண்ட பிறகும் அவர் மக்கள்...

பேரன்பு ஒளிரும் சிற்றகல்

சமுத்திரத்தையும், தூரத்து மலையையும் எத்தனை நேரம் பார்த்துக்கொண்டிருந்தாலும் அலுக்காது. சூரியோதயத்தையும், அஸ்தமனத்தையும் எத்தனை நாட்களுக்கு வேண்டுமானாலும் பார்த்துக்கொண்டே இருக்கலாம். நினைவு, மனதிலே ஓட்டம், அசைவு ஒன்றுமில்லாமல் சூன்யமாக நிம்மதியாக இருக்கும். அப்படியொரு நிம்மதி...

தாண்டவம்

’போயிட்டு வந்திருதேன்’ என்று சத்தம் கொடுக்கும் போது ஈஸ்வரி வெளியே வந்து ‘நானும் உங்ககூட வந்து அவங்க ரெண்டு பேர் காலிலேயும் விழுந்து கும்பிடணும் தான். ஆனால் இப்படி வரமுடியாத நிலைமை ஆயிட்டுது....

பாவலர் தெங்கரைமுத்துப் பிள்ளை

தெங்கிரிமுத்து என்று விளிப்பார் அவரை. வயதொத்தவர் தெங்கிரி என்றும். எமக்கவர் தெங்கிரிமுத்துப் பாட்டா. கொஞ்சம் விடம் என்றாலும் கைகால் முடக்காது, ஆளை வேக்காடும் வைக்காது. பெயர்த் திரிபின் இலக்கணக் குறிப்பு எழுதச் சொல்வோர்,...

என்புதோல் உயிர்

பல்லக்கு மெல்ல நகர்ந்தது. வெளியில் நிலவொளி தவழ்ந்தது. முன்னே ஐந்து பல்லக்கும், பின்னால் ஐந்து பல்லக்கும் வர, நடுவில் புனிதவதியின் பல்லக்கு. உற்ற துணையாக உடன்வரும் உறவினர்கள் உறக்கமின்றிப் பேசிக்கொண்டு வந்தார்கள். சிலர்...

வாராணசி கவிதைகள்

  காலம்         இங்கே   காலம் மூன்றல்ல; ஒன்றே ஒன்று  காலங்களுக்கு அப்பாலான  காலம்    இங்கே   இன்று பிறந்த இன்றும்  நாளை பிறக்கும் நாளையும்  பிறந்ததுமே   இறந்த காலத்துக்குள் ஒடுங்குகின்றன    இங்கே   அன்றாடம் உதிக்கும் சூரியன்  முதன்முதல் உதித்ததுபோலவே உதிக்கிறது  முதன்முதல் மறைந்ததுபோலவே மறைகிறது    இங்கே  காற்றில் எம்பும் புழுதிச்சுழலில்  யுகங்களுக்கு முன்பே மலர்ந்த பூவின்  மகரந்தம் மிஞ்சியிருக்கிறது.    இங்கே   ஒசிந்து...

அழகுப் பிள்ளை

அழகுப் பிள்ளை நின்று கொண்டிருந்ததே ஹெட்மாஸ்டர் கண்ணில் படவில்லை. இரண்டடி மட்டும் உயரமானவர் அழகுப் பிள்ளை. ஹெட் மாஸ்டரின் மேஜைக் கால்கள் அவரை விட உயரமாக இருந்ததால் மேஜைக்குக் கீழே அந்தக் கால்களுக்கு...

அல்ஹமதுலில்லாஹ்

அல்ஹமதுலில்லாஹ் என நீ உச்சரிக்கும்போதெல்லாம்  இருவாட்சியின் பெரும்பாத நிழல் என் மேல் கவியும் உன் நாக்கு  மேல் அண்ணத்தை தொட்டுத் திரும்பி  பற்களில் பட்டு  உதடுகளைக் குவிக்கும்போது  பனி பிளந்து இலை குளிர்ந்து  காற்று தணியும்  மழைப் பெய்து ஓய்ந்த கடலின்  நீலம் பாய்ந்த உன் முகத்தில்   அச்சொல் பூரணமடையும் போது பிறை தோன்றும் பின் மறையும் இடையில் விரியும் துண்டு வானம்  எனக்கும் உனக்கும் மட்டுமே. ———————————————— பூப்பனி  பெய்யும் ஒரு...

ஏதேன் காட்டின் துர்க்கந்தம்

போதையின் உச்சத்தில் சரிந்து கிடப்பதைப் போன்றதொரு சிலை, அந்த மதுக் கூடத்தின்  வாயிலருகில் அமைக்கப்பட்டிருக்கும். அதன் தோரணையிலிருக்கும் லயிப்பே கிறங்கடிக்கச் செய்வதாக முன்னரும் சில முறைகள் அவனுக்குத் தோன்றியிருக்கிறது. அப்படி விழுந்து கிடப்பதில்...