படைப்புகள்

கதைகள், கவிதைகள், தொடர்கள் உள்ளிட்ட நேரடி தமிழ் படைப்பாக்கங்கள்

பொட்டி

இரயில் மூன்று மணி நேரம் தாமதமாக நள்ளிரவு பன்னிரண்டு மணி முப்பத்தைந்து நிமிடத்திற்கு வந்து சேர்ந்தது. நடைமேடையில் முருகேசு இறங்கியதும் பார்வையை நீள விட்டார். அவர் பெட்டிக்கு முன்னிருந்த வேறு பெட்டிகளில் இருந்து...

மன்னிப்புக் கேட்பவர்கள்-மிலன் குந்தேரா (Milan kundera)

ஜூன் மாத காலையில், கிழக்கில் கிளம்பிய சூரியனைப் போல, மெதுவாக பாரீஸ் வீதியில் சென்று கொண்டிருந்தான் அலயன். எதிர்ப்பட்ட அனைத்து இளம் பெண்களும் குட்டையாக அணியப்பட்ட மேல் சட்டைக்கும், இறக்கமாக அணியப்பட்ட கால் சட்டைக்கும்...

கனலி 2024 வெளியீடுகள்

2024 ஆம் ஆண்டின் சென்னை புத்தகக் திருவிழாவில் கனலி சார்பில் ஆறு புத்தகங்கள் வெளியாகின்றன. மொழிப்பெயர்ப்புச் சிறுகதைகள்: ரஷ்ய மொழிப்பெயர்ப்புச் சிறுகதைகள் தமிழில் -கீதா மதிவாணன்  விலை :உரூபாய் 300 தொகுப்பிற்கான கீதா மதிவாணன் முன்னுரை: பத்தொன்பதாம் நூற்றாண்டு ரஷ்ய இலக்கியத்தின் பொற்காலம் எனப்படுகிறது. அக்காலத்தில்தான் ரஷ்ய இலக்கியத்தில் முன்னோடி முயற்சியாக, படிமம், குறியீடு, புனைவியம், யதார்த்தவியம், நவீனத்துவம், போன்றவற்றை உள்ளடக்கிய பல பரீட்சார்த்தமான...

“அடிப்படை மனித விழுமியங்களுக்குக் குரல் எழுப்புவதும் அரசியல்தான்” எழுத்தாளர் திலீப் குமார் நேர்காணல்

குஜராத்தியைத் தாய்மொழியாகக் கொண்ட திலீப் குமார் (பி. 1951), தமிழ் இலக்கியத்தில் தனக்கான தனித்த இடத்தை உருவாக்கிக்கொண்டவர். சிறுகதையாசிரியர், இலக்கியத் திறனாய்வாளர், மொழிபெயர்ப்பாளர் எனப் பல தளங்களில் இயங்கிவரும் திலீப் குமார், 1970களில்...

பருத்திப்பூ

முனியாண்டி சேர்வை தன்னுடைய நண்பரான சாலப்பட்டி ராசுவிடம், “நானும் கவனிச்சு பாத்திட்டேன்பா. அஞ்சு தலை ஒண்ணா சேந்துருது. ஆனா நாலு மொலை என்னைக்குமே சேர மாட்டீங்குது” என்றார் காதைக் கோழி இறகை வைத்துச்...

விபத்து

சாலையோர மரங்களில் இன்னும் உதிராமல் மீதமிருந்த மஞ்சள் நிற இலைகள், காற்றில் அசைவது தெருவொர மஞ்சள் விளக்குகளின் வெளிச்சத்தில் ஒரு நடனமென நிகழ்ந்துக்கொண்டிருந்தது. சற்றுமுன் பெய்து ஓய்ந்திருந்த மழையில் சாலைகள் முழுக்கவே நனைந்திருந்தன....

உலராதிருக்கும் வரை

என்னதான் வாய்கிழிய "வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடினேன், ஜீவகாருண்யம் என்று பேசினாலும், ஒரு கொசுக்கடி நம் உயிர்நேயத்தை ஒரு கணமாவது பல்லிளிக்கச் செய்துவிடுகிறதல்லவா? முதல்வன் திரைப்படத்தில் சுஜாதா எழுதியிருப்பார் இப்படி. "கொசுவுக்கெல்லாம்...

க்ரிட்டோ (அல்லது, நன்னடத்தைப் பற்றி) ப்ளேடோ

சாக்ரடீஸ்: என்ன க்ரிட்டோ இவ்வளவு சீக்கிரம் வந்துள்ளீர்? இது அதிகாலை இல்லையா? க்ரிட்டோ : ஆமாம், சாக்ரடீஸ். சாக்ரடீஸ்: மணி என்ன இருக்கும்? க்ரிட்டோ: இது விடியற்காலை.  சாக்ரடீஸ்: காவல்காரர் நீங்கள் சொல்வதைக் கேட்டு உங்களை உள்ளே அனுமதித்தது...

பிணைப்பு-ஜான் பால் சார்த்தர் (Jean Paul Sartre)

லுலு படுக்கையில் நிர்வாணமாகத் தூங்கிக் கொண்டிருந்தாள். படுக்கை விரிப்பு உடலைத் தழுவுவதை அவள் விரும்பியதும், அடிக்கடி உடைகளை சலவைக்குப் போடுவது தேவையில்லாத செலவை உண்டு பண்ணி விடுகிறது என்று நினைத்ததுமே அதற்குக் காரணம்....

புதைக்கப்பட்ட கதை   

கடுமையான குளிர்காலத்தின் இரவு என்பதால் தெருக்களில் ஆள் நடமாட்டம் குறைவாக இருந்தது. மார்ட்டின் தன் வீட்டின் வரவேற்பறையிலிருந்த சன்னல் வழியே வெளியே பார்த்துக்கொண்டிருந்தான். குளிருக்கு அணிந்திருக்கும் இரவு உடையுடன் அவனருகே வந்து தோள்...