ஷார்ட் சர்க்யூட்
கால் கடுத்து நின்றிருக்கும்
இரும்புக்குக்
குளிர் நடுக்குகிறது.
அடி தெரியாமல்
தழைய தழைய
கால் போர்த்திவிடுகிறது
காடு.
"காடு தன்னை காட்டிக்காம விடாது கேட்டுகிட்டியா" என்றான் லூர்துசாமி அவனுடன் வந்த செயபாலிடம்.
அவர்கள் கண் முன்னே தன் ஆறு கைகளையும் பரத்தி வைத்துக் கொண்டு...
வலி
வருடக்கணக்கில் திரும்பி வராத, முற்றிலுமாகத் தொடர்புகளேதுமில்லாமல் போய்விட்ட தனது கணவனை நினைத்து, ஒரு ஞாயிறு பூஜை முடித்து சர்ச் வளாகத்தில் ஆட்டோவிற்காகக் காத்திருந்த தருணத்தில், அவனது நினைவுகள் மேலெழுந்து ரெலினா ராஜேஷ் வாய்விட்டு...
நீக்கம்
மகிபாலன் அலுவலகத்திற்குப் போக காரை எடுக்கச் சென்றபோது, அவன் அம்மா, “மகி, மாஞ்செடி எவ்வளவு பெருசா வளர்ந்துடுச்சி பாரேன்” என்றாள். அவனை முன்பே அழைத்து வந்து, அந்தச் செடியைக் காட்டியிருக்க இயலாது. அதிகாலை...
சதீஷ்குமார் சீனிவாசன் கவிதைகள்
1.சொன்னபடியே ஒரு மழைக்காலம்
ஒரு நிழலுமற்ற
நம் மரங்களும் வாடிவிட்டன
மழைக்காலம் சமீபத்தில் இருப்பதன்
அறிவிப்புகள் வந்த வண்ணம் இருக்கின்றன
நம் சிறிய இனிப்புகளை
முன்பு போலவே
பாதுகாக்க இம்முறையும் முயன்றோம்
இம்முறையும் நம் இனிப்புகள்
கரைந்துவிட்டன
சொன்னபடியே ஒரு மழைக்காலம்
பெய்யத் தொடங்கியிருக்கிறது
ஒரு நிழலுமற்ற
நம் மரங்களின் மேல்.
....
2....
வ.அதியமான் கவிதைகள்
1. வெந்து தணியாத ஒரு காடு
சொல்
இன்னும் எவ்வளவு நேரம்
இந்தப் புல்லாங்குழலை
இப்படி
வாசித்துக்கொண்டே இருக்கப்போகிறாய்?
சொல்கிறேன்
இந்தப் புல்லாங்குழல்
மீண்டும்
மூங்கில் மரமாய்த் திரும்பும் வரைக்கும்
அம்மரம்
மூங்கில் புதராய்ச் செழிக்கும் வரைக்கும்
அப்புதர்
மூங்கில் வனமாய்ப் பெருகும் வரைக்கும்
அவ்வனத்தின் பச்சையை
கருங்குயில் ஒன்று
உச்சியில் அமர்ந்து
கூவும் வரைக்கும்
2. குலசாமி
வேகவேகமாய்
படியிறங்கிக்...
மொச்சை
சீத்தக் காட்டுத் தாத்தா செத்துவிட்டார் எனச் சேதி வந்தபோது குமராசு தூக்கத்திலிருந்தான். இரவு வேக்காடு தாங்காமல் வாசலில் கட்டில் போட்டுப் படுத்திருந்தவனுக்குச் சரியாகத் தூக்கமில்லை. மாட்டைக் கடித்து ரத்தச் சுவையில் சலிப்பேற்பட்ட சூலான்கள்...
பொறுப்பு
அந்த மலாய் உணவகத்தில் வைத்து, “எதுக்குத் தயங்கறீங்க? இது ஒண்ணும் உங்க நாடு இல்லையே? எவனோ ஒருத்தனோட நாடு. இருக்கறதுக்குள்ள சம்பாதிச்சிட்டு ஓடிப் போயிடணும்” என்றான் விசாகன் குடிவெறியில். பிரிட்டனில் செட்டிலான தமிழன்....
பணத்தின் குழந்தைகள்
ஞாயிற்றுக்கிழமை மாலை. சூப்பர் மார்க்கெட்டில் கூட்டம் அதிகமில்லை. இரண்டேயிரண்டு குளிர்ந்த டயட் கோக் டின்களை வாங்கி, பணம் செலுத்துவதற்காக நின்றிருந்த போது வாயிலுக்கு அருகே ஒரு முதிய பிச்சைக்காரரைப் பார்த்தேன். உள்ளே வருகையில்...
க.மோகனரங்கன் கவிதைகள்
1)புகல்
பகல் வெளிச்சத்தில்சற்றே துலக்கமாகவும்ஆற்றவியலாத துயரமாகவும்சுமக்கமாட்டாத பாரமாகவும்தோன்றும்எனது தோல்விகள்,இயலாமைகள்,ஏக்கப் பெருமூச்சுகள்எல்லாவற்றையும்மறைத்துக் கொள்ளவோஅல்லதுமறந்தாற்போலஇருந்துவிடவோ முடிகிறஇந்த இரவுதான்எவ்வளவு ஆறுதலானது?உந்தன்கண்மைக் கருப்பிலிருந்துபிறந்து,கார்குழல் சுருளுக்குள்வளரும் இருள்தான்என் மருள் நீக்கும்மருந்து.
2) மிச்சில்
உன்னொடுஇருந்த பொழுதில்மறந்த காலம்முழுவதும்உன்னைப்பிரிந்த பிறகு,ஒன்றுக்குப் பத்தாகத்திரண்டுபூதவுருக் கொண்டுஎழுந்து வந்து,இருந்தாற் போல்இருக்கவிடாமல்மருட்டுகிறது.உறக்கம்...
நடன விருந்துக்குப் பிறகு-லியோ டால்ஸ்டாய்
“ஒருவன் நல்லது எது, கெட்டது எது என்பதைத் தானே சுயமாகப் பகுத்தறிய இயலாது என்றும் அவனுடைய சூழ்நிலைதான் அதை முடிவு செய்கிறது என்றும் நீங்கள் சொன்னாலும், தற்செயல் நிகழ்வுகளே எல்லாவற்றுக்கும் காரணம் என்பேன்...















