மொழிபெயர்ப்புகள்

வேற்று மொழிகளிலிருந்து மொழிபெயர்க்கப்பட்ட படைப்புகள்

வாஸ்லவ் ஸ்மில்: வளர்ச்சி முடிவுக்கு வரவேண்டும். நம்முடைய பொருளாதார நண்பர்கள் அதை உணர்ந்ததாகத் தெரியவில்லை

வாஸ்லவ் ஸ்மில் (Vaclav Smil) கனடாவின் வின்னிபெக்கைச் சேர்ந்த மனிடோபா பல்கலைக்கழகத்தின் சுற்றுச்சூழல் துறையில் பணியாற்றி ஓய்வுபெற்ற மேன்மைதங்கிய பேராசிரியர் ஆவார். சுற்றுச்சூழல், மக்கள்தொகை, உணவு, சக்தி ஆகியவை குறித்த இவரது நூல்கள்...

மனிதநேய நோக்கத்திலிருந்து பொய் பேசலாம் என்றெண்ணப்பட்ட ஒரு உரிமையைப் பற்றி-இம்மானுவேல் காண்ட், தமிழில்-விவேக் ராதாகிருஷ்ணன்

“1797-ஆம் வருடத்தில் பிரான்ஸ்” (Frankreich im Jahr 1797) என்ற பத்திரிகையில், பகுதி VI, எண் 1-ல், பெஞ்சமின் கான்ஸ்டன்ட் என்ற பிரெஞ்சு மெய்யியலாளர் எழுதிய “அரசியல் எதிர்வினைகளைப் பற்றி” என்ற தலைப்பை...

ஒரு நீதிக்கதை

முன்னொரு காலத்தில், ஒரு ஓவியர் வாழ்ந்துவந்தார். அவர் அழகான ஓவியம் ஒன்றை வரைந்து, கண்ணாடியின் எதிரே மாட்டிவைத்தார். ஓவியத்தைக் கண்ணாடி மூலமாகப் பார்த்தால், அது தொலைவில் மிக மிக மென்மையாகவும், சாதாரணமாகத் தெரிவதைவிட...

இருபத்தாறு ஆண்களும் ஒரு பெண்ணும்-மாக்ஸிம் கார்க்கி, தமிழாக்கம் – கீதா மதிவாணன்

நாங்கள் இருபத்தாறு ஆண்கள், இருபத்தாறு உயிர் வாழும் இயந்திரங்கள். புழுக்கமான நிலவறைக்குள் அடைபட்டு, காலை முதல் இரவு வரை மாவு பிசைந்து க்ரிங்கில் மற்றும் உப்பு பிஸ்கட்களைத் தயாரித்துக் கொண்டிருந்தோம். நிலவறையின் ஜன்னல்களுக்கு...

அதிருப்தியைப் பெருக்கிய அமானுஷ்யம்-கார்மென் மரிய மஷாதோ,தமிழில்-சுபத்ரா

மிகச்சிறிதாகத்தான் அது ஆரம்பித்தது: மர்மமாக அடைத்துக்கொண்ட கழிவுநீர்க்குழாய்; படுக்கையறை ஜன்னலில் ஏற்பட்ட ஒரு கீறல். நாங்கள் சமீபமாகத்தான் அங்கே குடியேறியிருந்தோம், அப்போது கழிவுநீர்க்குழாய் சரியாகத்தான் இருந்தது, ஜன்னலும் கச்சிதமாய் இருந்தது, பிறகு திடீரென...

கலைஞனின் கடமை குறித்து ஆல்பெர் காம்யு

 சமூகத்தின் அரசியலில் படைப்பார்வத்தின் பங்கினைக் கலைஞர்கள் சந்தேகிக்கக்கூடாது -ஆல்பெர் காம்யு (Albert Camus) கீழைதேசத்தைச் சேர்ந்த அறிவாளி ஒருவர் பிரார்த்தனை செய்யும்போதெல்லாம்  அவரது தெய்வத்திடம் ஆபத்து மற்றும் கொந்தளிப்பான காலகட்டங்களில் வாழ்வதிலிருந்து அவருக்கு விலக்களிக்குமாறு மன்றாடுவதை...

வார்சன் ஷையர் கவிதைகள்

நேற்று மதியம் அவர்கள் செய்தது இதுவே அவர்கள் என் அத்தையின் வீட்டைத்  தீ மூட்டினார்கள் தொலைக்காட்சியில் வரும் பெண்கள் செய்யும் வகையில் ஒரு ஐந்து பவுண்ட் தாள் போல குறுக்கே மடிந்து நான் அழுதேன். என்னை நேசிப்பதை வழக்கமாயுள்ள பையனை...

கேப் காட் நுவார்: ஒரு விடுமுறையும் ஒரு புத்தகமும்

மகனைச் சந்தித்தோ விடுமுறை பயணம் மேற்கொண்டோ ஒரு வருடத்திற்கு மேலாகிவிட்டது. தடுப்பூசிச் சடங்குகளை முழுதாக செய்துமுடித்தது அதற்கெல்லாம் முற்றுப் புள்ளி வைப்பதற்கான ஒரு மங்கலத் தருணத்தை ஏற்படுத்திக் கொடுத்தது. பாஸ்டனில் எங்களுடன் சில...

வாட்டர் மெலன்(கன்னடம்) -கனகராஜ் பாலசுப்பிரமணியம், தமிழில் – நல்ல தம்பி

மறுபடியும் அதே சலங்கை ஒலி. யாரோ நடமாடிக் கொண்டிருக்கிறார்கள்.. உள்ளேயோ வெளியிலோ!? திடுக் என்று எழுந்து உட்கார்ந்த லட்சுமி அங்குமிங்கும் பார்க்கும்போது – அதே அறையில் படுத்திருந்த ரிச்சர்ட் படபடவென்று துடித்துக் கொண்டிருந்தான். லட்சுமியின் பயம் இருமடங்காகி...

ஃபாக்னர் தாஸ்தாயெவ்ஸ்கியை வாசிக்கிறார் -தாத்தியானா மொரஷோவா

ஃபாக்னர் கவனிக்கத்தக்க அளவில் குறிப்பிட்டார்: “தாஸ்தாயெவ்ஸ்கி என்னிடம் அதிக அளவில் செல்வாக்கு செலுத்தியவர் மட்டுமல்ல, அவரை வாசிப்பதில் அதிக அளவு நான் மகிழ்ச்சியைப் பெற்றவன், இன்னும் ஒவ்வொரு வருடமும் நான் அவரை மீண்டும்...