படைப்புகள்

கதைகள், கவிதைகள், தொடர்கள் உள்ளிட்ட நேரடி தமிழ் படைப்பாக்கங்கள்

சூரம்பாடு

சூரம்பாடு நடக்கும் போதுதான் அவனது இறுதி மூச்சு என்று நாங்கள் நால்வரும் முடிவு செய்தோம். அது அப்படித்தான் முடியுமென்பது எனக்குத் தெரிந்த விசயம் தான். என் பேச்சை மீறி மற்றவர்கள் ஏதும் சொல்லிவிட...

அந்திமந்தாரை

‘பிரியமுள்ள அக்காவிற்கு, ஆண்டவரின் மேலுள்ள விசுவாசம் என்னை வழிநடத்துகிறது. உங்களுக்கு நெடுநாளாகக் கடிதம் எழுதவேண்டும் என்று தோன்றியது. ஆனால் எல்லாமுமே அதற்குரிய நேரத்தில் தான் நடக்கவேண்டும் என இருக்கிறது போல. ஒரு அசந்தர்ப்பத்தில் நாம் இருவரும்...

ஓணி

1 சாலையெங்கும் படர்ந்திருந்த கொன்றை மலர்களை முடிந்தவரை கூட்டியாகிவிட்டது. அந்த நெடுஞ்சாலையின் வலது முடுக்கின் விளிம்பில் சேர்த்துக் குவிக்கப்பட்ட கொன்றைக் குவியலை இரு கைகளாலும் அள்ளியெடுத்து தடுப்போரம் அலர்ந்துநின்ற கொன்றை மரங்களுக்கடியில் விசிறிக் கொண்டிருந்தாள்...

காவு

கமலாவால் தூங்கவே முடியவில்லை. இரவெல்லாம், எதிர்காலமே இருண்டுபோன எண்ணங்களில் நித்திரை தொலைந்து போனது. அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்த பிள்ளைகளை அணைத்தபடி அறையின் இருட்டையே பார்த்துக் கிடந்தாள்.  சூரியன் உதிக்காமலேயே பொழுது மெல்ல விடிந்தபோது, மழை...

சமரசம் மலர்ஸ்

என்னதான் இருந்தாலும் கொடியாள் ஆளொரு விண்ணிதான் என தன்னையறியாமல் உரத்துக் கூறிவிட்டதை உணர்ந்து, தான் கூறியதை  யாராவது கவனித்திருப்பார்களா எனத் திரும்பிப் பார்த்தார் உலகளந்தபிள்ளை.  குரல் கொட்டாவியோடு  கலந்திருந்ததாலோ என்னவோ ஒருவருக்கும் விளங்கியிருக்கவில்லை. மெல்லிய...

பையுங்-ஷூல் ஹான் : மிகச் சுருக்கமான அறிமுகம்

நவதாராளவாத உலகில் 'சுதந்திரம்' என்பது என்னவாக இருக்கிறது என்பதை பல்வேறு சிந்தனையாளர்கள் கேள்விக்குட்படுத்தியுள்ளனர். அவர்களுள் முக்கியமானவர் பையுங் ஷூல் ஹான் (Byung-Chul Han). சுதந்திரத்தின் வழியாகவே தற்போது கட்டுப்பாடு சாத்தியமாகிறது என்பார். தொழில்நுட்பங்களைச் சுவீகரித்துக்கொண்டு வளர்ந்த நவதாராளவாத...

இன்பா கவிதைகள்

தையல்காரர்கள் வீதி நடைபாதையின் ஓர் ஓரத்தில் அமர்ந்திருக்கிறார்கள்கால் விரல்கள் தன்னிச்சையாய்மிதித்துக்கொண்டே இருக்கின்றனபெரும்பாலும் புதுத்துணிகளையேதைக்க விரும்புகிறார்கள்பழைய கிழிந்துபோன துணிகளையாரும் தைக்கக் கொடுப்பதில்லையாரும் தைத்துப் போடுவதையும் விரும்புவதில்லைநறுக்கிப்போட்ட வானவில்லாய்வார்த்தைத் துணிகள் வெட்டப்பட்டுசுற்றிலும் சிதறிக் கிடக்கின்றனதலைக்கு மேலே மெதுவாக...

பேட்ரிக் கவனாஹ் கவிதைகள்

என் தந்தையின் நினைவாக நான் காணும் ஒவ்வொரு வயதான மனிதரும் என் தந்தையை  நினைவூட்டுகின்றனர் ஒருமுறை அவர் புற்கட்டுகளை  அடுக்கிக்கொண்டிருந்தபோது மரணத்தோடு காதலுற்றார். கார்டினெர் சாலையில் நான் காணும், நடைபாதை கல்மீது தடுமாறிச்செல்லும் அம்மனிதர் தன் பாதிக்கண்களால் என்னை முறைத்துப்பார்த்தபடி இருந்தார் ஒருவேளை நான்...

ராஜன் ஆத்தியப்பன் கவிதைகள்

நோவின் தூல வடிவம் காற்றில் புதையும் ஊத்தைச் சொற்களின் பிடிமண்ணை வாரி வீசுகிறது முதிர்காமம். பச்சைக் கூட்டத்தினிடையேவலியின் இளங்குருத்து தனித்து எரிகிறது. நெருப்பைப் பழிவாங்குவதற்கெனபொழிவித்த பெருமழையெல்லாம்அம்பல முற்றத்திற்கு வெளியேஅடங்கிப் போயின. அத்தாணி மண்டபத்தில்காய வைத்திருந்தஉறக்கப் போர்வைகளை உலர விடாதுமடித்து...

பூவிதழ் உமேஷ் கவிதைகள்

1. நிலமும் பொழுதும் பழைய உயிரினம் நரிவால் என்று செல்லமாக அழைக்கும் தினையும் கம்பும் பாலேறினால் காவலுக்குச் செல்லும் நான் கிளிகளையும் கட்டை விரல் சிட்டுக்களையும் விரட்டுவதற்குச் சலித்துக்கொள்வேன் இரவைவிடப் பெரிய விலங்கு பகலென்று  பொருமுவேன். தையல்சிட்டுக்களோ எருக்கம் விதைகள் போலக் காற்றில்...