நன்னீர் -ஹேமபிரபா
முத்து மாரியம்மன் கோயிலில் ஆடி மாசக் கம்பம் நடுதல் சமீபத்தில்தான் முடிந்திருந்தது. குடத்தில் தண்ணீரை நிரப்பி, அதில் மஞ்சள், வேப்பிலைக் கீற்று எல்லாம் கலந்து, இடுப்பில் வைத்துக்கொண்டு கோயில் வரை நடந்தே போய்...
கங்காணி ப. சுடலைமணி
1.
தென்மலை ரயில் நிலையத்தில் நின்ற ரயிலிலிருந்து அவசரகதியில் மிகவும் பரபரப்புடன் மாரியப்பன், தன் மூத்த அக்கா மகன் ராஜவேலுவுடன் இறங்கினான். அவனது ஒரு கையில் துணிகள் அடங்கிய பெரிய ரெக்சின் பேக் இருந்தது....
ஜெயந்தி -அசோக்ராஜ்
''பாலகுருசாமி புக் இருக்கா?'' - எனக்கு நன்றாக நினைவிருக்கிறது, ஜெயந்தியிடம் நான் முதலில் பேசிய வார்த்தைகள் இவை தான். திண்ணையில் அவளும் அவள் அம்மாவும் உட்கார்ந்து மல்லிப்பூ கட்டிக் கொண்டிருந்தார்கள். அவளுக்குப் பின்னால்,...
கடல் மனிதன் -கை.அறிவழகன்
மழைக் காலத்தின் விடுமுறை நாட்களில் சிமெண்ட் பூசப்பட்ட சொரசொரப்பான அந்தக் கற்களில் கால்களை உரசியபடி தேங்கிக் கிடக்கும் தண்ணீரில் கால் நனையாமல் நடக்க முயற்சி செய்வது அலாதியானது, புனல் வடிவக் காகிதப் பொட்டலத்துக்குள்...
அழிந்து வரும் விலங்குகள், ஆபத்தின் விளிம்பில் மனிதன்-றின்னோஸா
இந்த உலகில் உள்ள எல்லாவற்றிற்குமே ஒரு முடிவு திகதி உண்டு. பிறக்கும் அனைத்து உயிர்களுமே ஒரு நாள் அழிந்து போகும் என்பது இயற்கையின் மாற்ற முடியாத விதி. ஆனாலும் அது விட்டுச் செல்லும்...
நரி Jackal (Canis aureus) -டி.ஆர்.ஏ.அருந்தவச்செல்வன்.
அழிந்து வரும் பாலூட்டிகளில் தற்போது குறிப்பிடத்தக்கதில் நரியும் ஒன்றாகும். இதனைக் காண்பதென்பது அரிதாகிவிட்டது.உலகில் சுமார் 27 நரியினங்கள் உள்ளதென அறியப்பட்டுள்ளது. உலகில் பெரும்பாலான பகுதிகளில் இவ்வினங்கள் வாழ்கின்றன என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
நாய்ப் பேரினத்தைச் சேர்ந்த பாலூட்டியான நரியானது...
ப்ளாக் மிரர் – நிஷாந்த்
Sign-in to Personalize your experience
நான் டைப் செய்துகொண்டிருக்கும் இந்த டாக்குமெண்ட் எங்கு வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும், அமர்ந்துகொண்டோ, வானில் பறந்தபடியோ மாற்றியமைக்கும் வசதியுடையது. சுருக்கமாக, எனக்கு ஏற்றபடி எல்லாவற்றையும் எங்கும் இருந்துகொண்டு...
ஸ்ரீநேசன் கவிதைகள்
நினைவஞ்சல்
தபால்காரர் ஊரில் நுழைகிறார்
சைக்கிள் மணியொலிப்பில்
சார் போஸ்ட் என்ற அழைப்பிழைய
வீட்டு வாசலில் ஞாபகத்தின் புறா
நிகழைத் தொட்டுச் சிறகடிக்கிறது
கழனிக் காட்டிலிருந்தவாறு
கடிதத்தை வாங்க கைநீட்டியதும்
போன நூற்றாண்டின் கடிதத்தை
இந்த நூற்றாண்டின் கைகளில்
கொடுத்துவிட்டுக் கிளம்பிவிட்டார்.
செல்வம் தேய்க்கும் படை
கண்ணீர்த் துளிகளின் கேவல்
உங்களைச்...
கூதல்மாரி நுண்துளி தூங்கா நிலம் -லீனா மணிமேகலை
1.
பொழியும்
பொழியும் போதே உறையும்
இறுகும்
இறுக இறுக கனக்கும்
உடையும்
உடைந்து கீறி வாளென அறுக்கும்
மிதக்கும்
மிதந்து மேகதாதாகி புகையும்
உறிஞ்சும்
உறிஞ்சிய நிறங்களை வெண்மையாக்கித் துப்பும்
நகர்த்தும்
நகர்த்திய நட்சத்திரங்களிடையே கூதலை நிரப்பும்
நிறையும்
நிறைந்து நிலத்தைப் பாலையாக்கித் தகிக்கும்
அதன் பெயர் பனியென்கிறார்கள்
அதன் பெயர் நாம்
2
இந்த அதிகாலையில்...
சாகிப்கிரான் கவிதைகள்
நிகழ்வது
கைவிடப்பட்ட இரட்டை முடிப்பு
பலூன்கள் தைரியமாக
வாகனங்களைத் தவிர்க்கப் பார்க்கின்றன.
டூவீலர்களுக்கும் சைக்கிள்களுக்கும்
காற்றிற்குப் பேராசைப்படாத
விறைப்புக் குறைந்த ஜோடிகள்
நழுவியபடியே சாதித்தன
கடைசியாக ஒரு டிப்பர் லாரி
பலூன் என்றால்
வெடித்துவிட வேண்டுமா என்ன?
பேரதிசயத்தைக் கடந்தபடி
அந்த நாள் நிகழ்கிறது
நினைவேக்கமாக.
தூ...தூ...
எல்லோரும் அன்பாகக்
கேட்கிறார்கள்தான்
பிறகு குறுகிய சந்துகளின்
அரசாணிகள் அப்படியே
அந்தப்...















